ஏழாவது முறையாக இணையும் சுசீந்திரன் - டி.இமான் கூட்டணி... வீடியோ வெளியிட்ட இயக்குநர்

சென்னை : இயக்குநர் சுசீந்திரன் அடுத்தடுத்த சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

இவரது இயக்கத்தில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சுசீந்திரனின் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் டி இமான் 7வது முறையாக இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். தொடர்ந்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா என இவர் வெற்றிப் படங்களாக கொடுத்தார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

புதிய படத்தில் சுசீந்திரன்

புதிய படத்தில் சுசீந்திரன்

தற்போது ஏஞ்செலினா, சிவசிவா ஆகிய படங்களை இவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் இணைந்துள்ளார் சுசீந்திரன். வரும் மே 1ம் தேதி முதல் இந்த படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

7வது முறையாக கூட்டணி

7வது முறையாக கூட்டணி

நேற்றைய தினம் இசையமைப்பாளர் டி இமானின் பிறந்தநாளையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தார் சுசீந்திரன். இந்த வீடியோவில் தானும் டி இமானும் 7வது முறையாக இணையவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

அதிக பொருட்செலவில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது படத்தின் முதற்கட்ட பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இமானுடன் கூட்டணி

மீண்டும் இமானுடன் கூட்டணி

முன்னதாக சுசீந்திரன் மற்றும் டி இமான் இருவரும் இணைந்து பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் 7வது முறையாக இணையவுள்ளனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு

சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் சிம்பு லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியானது ஈஸ்வரன். நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருந்த சிம்பு இந்தப் படத்தில் உடலை சிறப்பான வகையில் குறைத்து நடித்திருந்தார். இந்தப் படம் சிம்புவிற்கு சிறப்பான வகையில் கைகொடுத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X