பாரதிராஜா, சசிகுமார் இணையும் கென்னடி கிளப்
Recommended Video

சென்னை: சசிகுமார் பாரதிராஜா இணைந்துள்ள சுசீந்திரன் படத்திற்கு கென்னடி கிளப் என பெயரிட்டுள்ளனர்.
சுசீந்திரன் பெண்கள் கபடியை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பாரதிராஜா மற்றும் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் சூரி, முனிஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீத்து, சௌமியா, ஸ்மிரிதி, சௌந்தர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாலிவுட்டிலிருந்து ஒரு வில்லனை அழைத்து வர சுசீந்திரன் திட்டமிட்டுள்ளார். பழனி, கோபிச்செட்டிப்பாளையம், தென்காசி, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளுக்கு கதையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கென்னடி கிளப் என பெயரிட்டுள்ளனர்.
சுசீந்திரனின் தந்தை ஒரு கபடி பயிற்சியாளர் ஆவார். கடந்த நாற்பது ஆண்டுகளாக கபடி பயிற்சி அளிக்கும் கிளப் நடத்தி வருகிறார். இன்றைக்கு இருக்கும் பல விளையாட்டு வீரர்கள் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள். அதனால் கென்னடி கிளப் என பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தில் ஏழு நிஜ கபடி வீராங்கணைகள் நடித்துள்ளனர். அறிமுக நாயகி மீனாட்சி மற்றும் நீத்து, சௌமியா, ஸ்மிரிதி, சௌந்தர்யாவைத் தவிர மற்றவர்கள் உண்மையான கபடி வீராங்கணைகள் என சொல்லப்படுகிறது.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார், ஆர்.பி.கௌரவ் மற்றும் சேகர் ஒளிப்பதிவு செய்கின்றனர். மாவீரன் கிட்டு திரைப்படத்திற்குப் பிறகு இமான் சுசீந்திரனுடன் இணைந்துள்ளார். இப்படத்தை நல்லுசாமி பிச்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் சுசீந்திரனின் சகோதரர் தாய் சரவணன் தயாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications











