சிம்புவுக்கு ஈஸ்வரன், ஜெய்க்கு சிவ சிவா.. சுசீந்திரன் டைட்டில் சிவமயமா இருக்கே.. ரசிகர்கள் கேள்வி!

By

சென்னை: ஈஸ்வரன் படத்தை அடுத்து தனது அடுத்த படத்துக்கு சிவ சிவா என டைட்டில் வைத்துள்ளார், இயக்குனர் சுசீந்திரன்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா, பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், ஈஸ்வரன்.

இதன் ஷூட்டிங் குறுகிய காலத்தில் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

தீபாவளி அதிகாலை

தீபாவளி அதிகாலை

இதில் மற்றொரு ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். இதன் டீசர் தீபாவளி அன்று அதிகாலை வெளியிடப்பட்டது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் சுசீந்திரன் சத்தம் போடாமல் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார்.

டைட்டில் சிவ சிவா

டைட்டில் சிவ சிவா

ஆக்‌ஷன் படமான இதில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் 30 வது படம். இந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் வெங்கட் பிரபு நேற்று ட்விட்டரில் வெளியிட்டார். படத்துக்கு, சிவ சிவா என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில், ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்.

இசை அறிமுகம் ஜெய்

இசை அறிமுகம் ஜெய்

சத்ரு, சரத், ஜே.பி., காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் பிரின்ஸ், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் நடிகர் ஜெய் அறிமுகமாகிறார். வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்

லெண்டி ஸ்டூடியோஸ்

லெண்டி ஸ்டூடியோஸ்

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை லெண்டி ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். அவர் கூறும்போது, தரமான, அதே நேரம் ரசிகர்கள் கொண்டாடும் படியான படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் முதல் படைப்பு நடிகர் ஜெய்யின் 30 வது படமாகவும் உருவாவது மகிழ்ச்சியை தருகிறது' என்றார்.

சிவமயமா இருக்கே?

சிவமயமா இருக்கே?

சிம்பு படத்துக்கு ஈஸ்வரன் என்றும் ஜெய் படத்துக்கு சிவ சிவா என்றும் இயக்குனர் சுசீந்திரன் டைட்டில் வைத்திருப்பதால், 'என்ன டைட்டில் எல்லாம் ஒரே சிவமயமா இருக்கே? என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேட்டுள்ளனர். சிலர் ஜெய் இசை அமைப்பாளர் ஆவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X