இன்னும் சில வருடங்களில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு இயக்குநர் சுசீந்திரன் புகழாரம்

சென்னை: இன்னும் சில வருடங்களில் நடிகர் சிம்பு இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் என நடிகர் இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். கிராமத்து பின்னணியில் ஃபேமிலி சப்ஜெக்ட்டாக உருவாகி உள்ள இந்தப் படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு 30 கிலோ வரை எடையை குறைத்து செம ஸ்லீம்மாக மாறினார். இதனை தொடர்ந்து படத்தின் எதிர்பார்ப்பு எகிறியது.

உங்களுக்குதான் தெரியும்

உங்களுக்குதான் தெரியும்

இந்நிலையில் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சுசீந்திரன், சிம்புவை பாராட்டி பேசினார். அவர் பேசியதாவது, சிம்புவைப் பற்றி எங்களைவிட உங்களுக்குத்தான் அதிகமாக தெரியும். ஏனென்றால் எங்களைவிட அதிகமாக நீங்கள்தான் அவரை அதிகமாக பின்தொடருகிறீர்கள்.

வேண்டாம் என்றார்கள்..

வேண்டாம் என்றார்கள்..

ஆனால், சிம்புவுடன் நான் பழகும்போது தான் தெரிந்தது அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று. இன்னும் சில வருடங்களில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் என்பதில் ஐயமில்லை. இந்த வருடத்திலேயே அவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும். சிம்புவை வைத்து இயக்க போகிறேன் என்றதும் பல தயாரிப்பாளர்கள் எனக்கு போன் செய்து வேண்டாம் என்றார்கள்.

ஒரு மாதத்தில் முடிந்தது

ஒரு மாதத்தில் முடிந்தது

ஆனால், சிம்பு மற்றவர்கள் சொல்வதற்கு காது கொடுக்காதீர்கள். என் பின்னால் நீங்கள் மட்டும் இருங்கள். படப்பிடிப்பிற்கு 9ஆம் தேதி அன்று நான் இருப்பேன் என்றார். அதேபோல், நானும் இயக்கினேன். ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியிடுகிறோம்.

வெற்றி விழாவில் சந்திக்கிறேன்

வெற்றி விழாவில் சந்திக்கிறேன்

திருமணத்தைப் பற்றி இப்போது பேச வேண்டாம் விட்டுவிடுவோம்.
இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சிலர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்களையெல்லாம் ‘ஈஸ்வரன்' படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கிறேன்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நிதி அகர்வாலை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி. இப்படம் விரைந்து முடித்து வெளியாவதற்கு தயாரிப்பாளர் பாலாஜி காப்பா தான் காரணம். அவருக்கு மிகப்பெரிய நன்றி. இப்படத்தில் சிம்பு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் துரை. அவர் ஜெய் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X