கந்துவட்டிக்காரனை விட மோசமானவன் அவனைப் பாதுகாக்கும் அரசியல்வாதி! - சுசீந்திரன்
சென்னை: கந்துவட்டிக்காரனை விட மோசமானவன் அவனைப் பாதுகாக்கும் அரசியல்வாதி என இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
கந்து வட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவம் தமிழகத்தையே பதற வைத்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இயக்குநர் சுசீந்திரன் 'கொலைகாரன்' என்ற தலைப்பில் ஒரு கருத்தை தன் கைப்பட எழுதி வெளியிட்டுள்ளார்.

அதில்,
"கந்துவட்டி ஒரு பாவச்செயல்
கந்துவட்டி ஒரு பெருங்குற்றம்
கந்துவட்டி ஒரு மனிதநேயமற்ற செயல்
கந்துவட்டி கொலைகக்கு நிகரான செயல்
கந்துவட்டிக்காரன்
மனித உணர்வுகளையும்
மனித உயிர்களையும்
உறியும் ஒரு அட்டைப்பூச்சி
இவனை விட மோசமானவன்,
அயோக்கியன்,
யார் என்றால்
இவர்களை பாதுகாக்கும்
அரசியல்வாதிகளும் பதவியில் இருப்பவர்களும்தான்",
என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications