திடீர் மாரடைப்பு.. பிரபல இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மரணம்.. திரையுலகினர் இரங்கல்!

By

சென்னை: பிரபல இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார்.

விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடித்த வெண்ணிலா கபடி குழு படம் மூலம் இயக்குனராக, அறிமுகமானவர் சுசீந்திரன்.

இந்தப் படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இது ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

நான் மகான் அல்ல

நான் மகான் அல்ல

இந்தப் படத்தை அடுத்து கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்தை இயக்கினார். இந்தப் படமும் கவனிக்கப்பட்டது. அடுத்து தேசிய விருது பெற்ற அழகர் சாமியின் குதிரை என்ற படத்தை இயக்கினார். அடுத்து விக்ரம் நடித்த ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், விஷால் நடித்த பாண்டிய நாடு உட்பட சில படங்களை இயக்கினார்.

ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம்

இப்போது, சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு நேற்று ரிலீஸ் ஆனது. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சுசீந்திரன், பொங்கலுக்காக ஊரில் இருக்கிறார். இந்நிலையில் அவருடைய தாயார் ஜெயலட்சுமிக்கு இன்று காலை உடல் நிலை சரியில்லாமல் போனது.

மாரடைப்பு காரணமாக

மாரடைப்பு காரணமாக

இதையடுத்து ஒட்டன் சத்திரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி 11 மணியளவில் உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 62.

திரையுலகினர் இரங்கல்

திரையுலகினர் இரங்கல்

இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது. மறைந்த ஜெயலட்சுமியின் கணவர் நல்லுச்சாமி. இவர்களுக்கு இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் நல்லுசாமி பிக்சர்ஸ் சரவணன், மேலும் ஒரு சகோதரர், சகோதரி உள்ளனர். இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மறைவை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X