twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்புச் செழியன் பெயரைக் கூட உங்களால சொல்ல முடியலையே விஷால்... சுசீந்திரன் சுளீர்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    அன்புச் செழியன் பெயரைக் கூட உங்களால சொல்ல முடியலையே விஷால்...சுசீந்திரன் சுளீர்!- வீடியோ

    சென்னை : நடிகர் சசிகுமாரின் கம்பெனி ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வந்த அவரது உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

    மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் என்பவரால் கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டு இந்த தற்கொலை முடிவை எடுத்ததாக அசோக் தனது கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    இது பற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையைப் பார்த்து இயக்குநர் சுசீந்திரன் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார்.

    அசோக் தற்கொலை

    அசோக் தற்கொலை

    நடிகர் சசிகுமாரின் மைத்துனரான அசோக், சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். அவர் நேற்று மாலை ஒரு கடிதம் எழுதிவைத்துவவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டிக் கொடுமையால் மிகவும் துன்பப்பட்டு தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக எழுதியிருக்கிறார் அசோக். கந்துவட்டிக்காரர்களால் மிரட்டலுக்கு ஆளானதால் தற்கொலை செய்துகொள்வதாக உருக்கமான கடிம் எழுதியிருக்கிறார்.

    மதுரை அன்புச்செழியன்

    மதுரை அன்புச்செழியன்

    சினிமா ஃபைனான்சியர், தயாரிப்பாளர் என சினிமா மாஃபியாவாக வலம் வரும் அன்புச் செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. நடிகர் சசிகுமார், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அன்புச் செழியன் மீது கந்துவட்டிக் கொடுமை, தற்கொலைக்குத் தூண்டியது ஆகியவற்றைக் குறிப்பிட்டு புகார் கொடுத்துள்ளார்.

    விஷால் அறிக்கை

    இந்நிலையில், அசோக்கின் தற்கொலை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் 'கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும், கந்துவட்டிக் காரர்கள் தமிழ் சினிமாவில் இருந்து ஓடிவிடுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அசோக் சாவுக்கு காரணமாக இருந்த கந்துவட்டி அன்புவின் பெயரை அறிக்கையில் ஒரு இடத்தில கூடக் குறிப்பிடவில்லை.

    சுசீந்திரன் கேள்வி

    விஷாலின் அறிக்கையை சினிமா பி.ஆர்.ஓ ஜான்சன் பகிர்ந்திருந்தார். அந்த ட்வீட்டில் இயக்குநர் சுசீந்திரன் காட்டமாக ரிப்ளை செய்திருக்கிறார். 'அன்புவின் பெயரைக் குறிப்பிடவே பயப்படுகிறீர்கள், நீங்கள் எப்படி தயாரிப்பாளர்களின் பிரச்னையை தீர்க்கப் போகிறீர்கள்' என இயக்குனர் சுசீந்திரன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இந்தக் கேள்வியையே பலரும் எழுப்பி வருகிறார்கள்.

    English summary
    Sasikumar's brother-in-law, Ashok Kumar, who managed the company productions, committed suicide yesterday. The producers council chairman Vishal has issued a statement on this. Director Suseenthiran has asked a question about the press release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X