கதை கேட்கிறேன் என்ற விஜய் இதுவரை கேட்கவில்லை, அஜீத்...: சுசீந்திரன்
Recommended Video

சென்னை: விஜய் சாரை ஒரு முறை சந்தித்தேன். கதை கேட்கிறேன் என்றார். ஆனால் இது வரை கேட்கவில்லை. அஜீத் சாருக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி கதை சொல்ல அபாயின்மென்ட் கேட்டேன். இதுவரை கொடுக்கவில்லை என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை இயக்கி முடித்துள்ளார் சுசீந்திரன். அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருந்தது. ஆனால் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பண்டிகை
தீபாவளி, பொங்கலுக்கு ஒரு நாள் கூட ஊருக்கு போனது கிடையாது. ஊருக்கு போனால் என்ன பண்ணுகிறாய், அடுத்து என்ன படம் என்று கேட்பார்கள்.

2009
என் வாழ்க்கையில் 18 வயதிற்கு பிறகு மொத்த குடும்பமும் சந்தோஷமாக தீபாவளி கொண்டாடியது வெண்ணிலா கபடிக் குழு படத்திற்கு பிறகு தான். 2009ம் ஆண்டு தீபாவளியை மறக்க முடியாது. அனைவருக்கும் உடை எடுத்துக் கொடுத்தேன்.

படம் ரிலீஸ்
என் படங்களில் தீபாவளிக்கு ரிலீஸான படம் பாண்டிய நாடு. தமிழ் சினிமாவில் எனக்கு நிலையான இடத்தை தேடிக் கொடுத்த படம் பாண்டிய நாடு. இந்த தீபாவளிக்கு நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை ரிலீஸ் செய்ய நினைத்தேன். ஆனால் ஆதரவு இல்லாததால் முடியவில்லை. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

சூர்யா
விஜய் சாரை ஒரு முறை சந்தித்தேன். கதை கேட்கிறேன் என்றார். ஆனால் இது வரை கேட்கவில்லை. அது ஏன் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். சூர்யா சாரிடம் ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு பிடிக்கவில்லை.

கதை
அஜீத் சாருக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி கதை சொல்ல அபாயின்மென்ட் கேட்டேன். இதுவரை கொடுக்கவில்லை. நீங்களாவது சொல்லி அபாயின்மென்ட் வாங்கிக் கொடுங்கள் என்றார்.


Click it and Unblock the Notifications