twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த் மரணம்: காதலி ரியாவிடம் 10 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய சிபிஐ.. மீண்டும் சம்மன்!

    |

    சென்னை: நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது காதலியான ரியா சக்ரவர்த்தியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

    Recommended Video

    Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

    நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    அவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. சுஷாந்த் மரணம் தொடர்பாக முன்னதாக மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.

    சிபிஐ விசாரணை

    சிபிஐ விசாரணை

    ஆனால் மும்பை போலீசாரின் விசாரணையில் நம்பிக்கையில்லை என கூறி சுஷாந்தின் குடும்பத்தினர் சிபிஐ விசாரணை கோரினர். இதனை தொடர்ந்து சுஷாந்த் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சுஷாந்த் வழக்கை விசாரிக்க தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், மும்பை போலீசாரிடம் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றனர்.

    ரியாவிடம் சிபிஐ விசாரணை

    ரியாவிடம் சிபிஐ விசாரணை

    தொடர்ந்து சுஷாந்தின் பிளாட்மெட்டும் நண்பருமான சித்தார்த் பிதானி மற்றும் சமையல்காரர் நீரஜ் சிங் ஆகியோரிடம் பல கட்டங்களாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அவரது காதலியான ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

    20 கேள்விகள்

    20 கேள்விகள்

    நேற்று காலை 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுமார் பத்தரை மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகளின் குழு ரியாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்காக 20 கேள்விகள் அடங்கிய பட்டியலை தயார் செய்த சிபிஐ அதிகாரிகள், போதை மருந்து விவகாரம் தொடர்பாகவும் விசாரித்ததாகவும் தெரிகிறது.

    பண பரிவர்த்தனை

    பண பரிவர்த்தனை

    மேலும் சுஷாந்த் வங்கிக்கணக்கில் இருந்து பணம் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்டது தொடர்பாகவும், மற்ற பண பரிவர்த்தனை தொடர்பாகவும் சிபிஐ அதிகாரிகள் ரியா மற்றும் அவரது கூட்டாளியான சாமுவேல் மிராண்டாவிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும் ரியாவுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    மீண்டும் சம்மன்

    மீண்டும் சம்மன்

    இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதுதொடர்பாக ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். முன்னதாக கடந்த வியாழக்கிழமை ரியாவின் சகோதரரான ஷோவிக்கிடம் சிபிஐ அதிகாரிகள் 14 மணிநேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sushant death case: CBI grilled Rhea for 10 hours. CBI questioned her about drug issue and financial angle also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X