கூடும் க்ரைம் ரேட்.. சுஷாந்தின் கிரெடிட் கார்டு பின் நம்பரை மாற்ற முயன்ற ரியா.. அம்பலமான அடுத்த சதி!

மும்பை: சுஷாந்தின் கிரெடிட் கார்டு பின் நம்பரை ரியா சக்ரவர்த்தி மாற்ற முயன்றது அம்பலமாகியுள்ளது.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான ஆதாரங்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.

சுஷாந்த் மன அழுத்தத்திற்கும் அவரது தற்கொலை முடிவுக்கும் காரணம், ரியா தயாரிப்பாளரான மகேஷ் பட்டுடன் நெருக்கமாக இருந்ததே என குற்றச்சாட்டு எழுந்தது.

வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்ஸ்

வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்ஸ்

அதனை உறுதிப்படுத்தும் வகையில் மகேஷ் பட்டுடன் ரியா சக்ரவர்த்தி நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் அவருடன் சாட் செய்த வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்டுகள் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து, சுஷாந்த் ரியாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார் என்பதை நிரூபிக்கும் வகையிலான வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்டுகள் வெளியானது.

30 நிமிடத்திற்கு..

30 நிமிடத்திற்கு..

இந்நிலையில் ரியா தனது மேனேஜர் ஜெயா சாகாவிடம் இருந்து சுஷாந்துக்கு கொடுக்க போதை மருந்து வாங்கியதும், அதனை 30 நிமிடத்திற்கு ஒருமுறை காபி, டீ, அல்லது தண்ணீரில் 4 சொட்டு கலந்து கொடுக்க வேண்டும் என்று ரியாவிடம் ஜெயா கூறிய வாட்ஸ்அப் சாட்டுகள் வைரலானது.

வேலை செய்தது..

வேலை செய்தது..

மேலும் போதை மருந்து கொடுத்தப் பிறகு அது வேலை செய்ததா என ஜெயா சாகா கேட்டதும், அதற்கும் ஆமாம் அவரை கொஞ்சம் அமைதிப்படுத்தியிருக்கிறது என்று ரியா பதிலளித்ததும் நேற்று வைரலானது. மற்றொரு சாட்டில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளான எம்டிஎம்ஏ எல்எஸ்டி, சிபிடி மற்றும் கஞ்சா குறித்து பேசியதும் தெரியவந்துள்ளது.

வீட்டு மேலாளருடன் சாட்

வீட்டு மேலாளருடன் சாட்

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த இந்த உரையாடலில் நடிகை ரியா சக்ரவர்த்தி எம்டிஎம்ஏ எல்எஸ்டி உள்ளிட்ட பல போதை மருந்துகளை உட்கொண்டது குறித்து பேசியுள்ளார். இந்நிலையில் மற்றொரு சாட்டில்
ரியாவுக்கும் சுஷாந்தின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டாவுக்கும் இடையிலான உரையாடல் வெளியாகியுள்ளது.

பின் நண்பரை அனுப்புங்கள்

பின் நண்பரை அனுப்புங்கள்

அதில், ரியா சக்ரவர்த்தி சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வங்கி கணக்கை அக்ஸஸ் செய்ய முயற்சித்தது அம்பலமாகியுள்ளது. "நீங்கள் சிறிய அட்டையின் பின்னை அனுப்ப முடியுமா, நாம் நெட் பேங்கிங் பின்னை மாற்றலாம்'என மிராண்டாவுக்கு ரியா சக்ரவர்த்தி மெஸேஜ் அனுப்பியுள்ளார்.

ரூ. 5000க்கு ஒரு பை

ரூ. 5000க்கு ஒரு பை

மேலும் சுஷாந்துக்கு போதை மருந்து கொடுத்ததில் அவரது வீட்டு வேலைக்காரரான தீபேஷ் சாவந்துக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. ரியா சக்ரவர்த்திக்கும் சுஷாந்த் சிங்கின் வீட்டு வேலைக்காரரான தீபேஷ் சாவந்திற்கும் இடையிலான மற்றொரு உரையாடலில் இருவரும் 5,000 ரூபாய்க்கு ஒரு பை மரிஜுவானாவை வாங்குவது பற்றி பேசியுள்ளனர்.

க்ரைம் ரேட்டுகள்

க்ரைம் ரேட்டுகள்

நாள் தோறும் வெளியாகும் ஒவ்வொரு ஆதாரமும் ரியா சக்ரவர்த்தி மீதான க்ரைம் ரேட்டுகளை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை தகவலின் அடிப்படையில் போதைபொருள் தடுப்பு பிரிவினர் ரியா சக்ரவர்த்தி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அழிக்கப்பட்ட ஹார்டு டிரைவ்ஸ்

அழிக்கப்பட்ட ஹார்டு டிரைவ்ஸ்

இதனிடையே ரியா சக்ரவர்த்தி வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஜூன் 8 ஆம் தேதி மோன்ட் பிளாங்க் அபார்ட்மெண்டில் உள்ள சுஷாந்தின் வீட்டில் இருந்த 8 ஹார்ட் டிரைவ்கள் அழிக்கப்பட்டதாக சுஷாந்தின் நண்பரும் பிளாட்மேட்டுமான சித்தார்த் பிதானி ஏற்கனவே சிபிஐக்கு தெரிவித்துள்ளார்.

அன்று தான் திஷா தற்கொலை

அன்று தான் திஷா தற்கொலை

ஜூன் 8 ஆம் தேதி தனது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ரியாவும் சுஷாந்தும் சண்டை போட்டுக் கொண்டனர் என்றும் அவர் கூறியிருந்தார். சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் பணிபுரிந்த அவரது மேலாளரான திஷா சாலியன் ஜூன் 8ஆம் தேதியான அன்றுதான் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X