சுஷாந்தை கொலை செய்தது இந்த 2 அப்பாக்கள்தான்.. ஜிம் பார்ட்னரின் பகீர் தகவலால் பரபரப்பு!

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தை கொலை செய்தது இந்த ரியா சக்ரவர்த்தியின் டாடியும் அவரது சுகர் டாடியும்தான் என சுஷாந்தின் ஜிம் பார்ட்னரான சுனில் சுக்லா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு விசாரணையை சிபிஐ கையில் எடுத்ததிலிருந்து பரபரப்பு அதிகரித்துள்ளது.

அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமின்றி நண்பர்களும் சக நடிகர்களும் நடிகர் சுஷாந்தின் மரணத்திற்கு நீதி கேட்டு வருகின்றனர்.

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

சுஷாந்தின் நண்பர்கள் அவர் குறித்து அறிந்த தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இந்த லிஸ்ட்டில் தற்போது இடம் பிடித்திருப்பவர் சுஷாந்தின் ஜிம் பார்ட்னரான சுனில் சுக்லா. இவர் அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார்.

சதி திட்டம் தீட்டியவர்கள்

சதி திட்டம் தீட்டியவர்கள்

அதாவது சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தியின் பயாலஜிக்கல் தந்தை மற்றும் 'சுகர் டாடியான' மகேஷ் பட் ஆகியோர்தான் சுஷாந்தின் கொலைக்கு சதி திட்டம் தீட்டியவர்கள என்று கூறியுள்ளார். ரியா சக்ரவர்த்தியின் தந்தைதான் சுஷாந்துக்கு மன அழுத்தத்துக்கான மருந்துகளை வழங்கியதாக அண்மையில் தகவல் வெளியானது.

மருந்துகளை கொடுத்து

மருந்துகளை கொடுத்து

இந்நிலையில் சுஷாந்தின் நண்பர் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும் ரியா தனது தந்தை வழங்கிய மருந்துகளை சுஷாந்துக்கு கொடுத்துவிட்டு அவரையும் தனியாக விட்டுவிட்டு சென்று விட்டார். ரியா இல்லாத நேரத்தில் அவரது பிளாட்மேட் சித்தார்த் பிதானி, சமையல்காரர் நீரஜ் மற்றும் மேலாளர் தீபேஷ் சாவந்த் ஆகியோர் அதே மருந்துகளை அவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்றார்.

நல்ல மனநிலையில்..

நல்ல மனநிலையில்..

மேலும் சுஷாந்தின் மனத் திறனில் எந்தத் தவறும் இல்லை என்றும் கூறினார். அவர் நல்ல மனநிலையில் இருந்ததாகவே கூறியுள்ளார். அவர்கள் ஜிம்மில் ஒன்றாகச் சந்தித்துப் பணியாற்றியதைப் பற்றியும் பேசியுள்ளார். சுஷாந்த் மல்டி வைட்டமின் சப்ளிமெண்ட்ஸையும் எடுத்துக்கொண்டார் என்றும் கூறினார்.

தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்

தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்

மூன்று சாட்சிகளும் முரண்பாடான அறிக்கைகளை அளிப்பதால், நிச்சயமாக எல்லாமே திட்டமிடப்பட்டவை என்று அவர் கூறினார். இரவே சுஷாந்தை கொன்ற நபர்கள் அவரை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

ரிசார்ட்டிலும் விசாரணை

ரிசார்ட்டிலும் விசாரணை

இதனிடையே சிபிஐ எஸ்ஐடி அதிகாரிகள் நேற்று மீண்டும் நடிகரின் பிளாட்மேட் சித்தார்த் பிதானி மற்றும் அவரது ஊழியர்கள் நீரஜ் சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சுஷாந்த் இரண்டு மாதங்கள் தங்கியிருந்த வாட்டர்ஸ்டோன் ரிசார்ட்டை மீண்டும் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.

பிரிவுக்கு பிறகு எப்படி?

பிரிவுக்கு பிறகு எப்படி?

மும்பையின் சாண்டாக்ரூஸ் பகுதியில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் பித்தானியும் சிங்கும் நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரியா சக்ரவர்த்தியை பிரிந்த பின்னர் சுஷாந்தின் நடத்தை குறித்தும், சுஷாந்தின் நிதி மற்றும் தொழில்ரீதியான முடிவுகளை எடுத்தாரா என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

பிரித்து வைத்திருந்தாரா?

பிரித்து வைத்திருந்தாரா?

சித்தார்த் பிதானி மற்றும் சிங் ஆகியோரைத் தவிர நடிகரின் தனிப்பட்ட ஊழியர்களான தீபேஷ் சாவந்தையும் ஞாயிற்றுக்கிழமை விசாரித்ததாக சிபிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. உண்மையில் மறைந்த நடிகரை அவரது குடும்பத்திலிருந்து ரியா சக்ரவர்த்தி பிரித்து தனிமைப் படுத்தி வைத்திருந்தாரா என்றும் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X