இதுதாண்டா 'சுத்'தமான ரொமான்ஸ்... பரினீதி, வாணிக்கு 27 கிஸ் கொடுத்த சுஷ்!
மும்பை: பாலிவுட்டுக்கு ஒரு புதிய சீரியல் கிஸ்ஸர் கிடைத்துள்ளார். அவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
சுத் தேசி ரொமான்ஸ் படத்தில், நாயகி பரினீதி சோப்ராவுக்கும், வாணி கபூருக்கும் வாய் வலிக்க வலிக்க 27 முத்தம் கொடுத்துள்ளாராம் சுஷாந்த்.
இதையடுத்து பாலிவுட்டின் கிஸ்ஸிங் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கும் இம்ரான் ஹஸ்மியை இவர் ஓவர் டேக் செய்து விடுவார் என பேச ஆரம்பித்துள்ளனர்.

சுத்தமான ரொமான்ஸ்
இந்தப் படத்திற்காக ஒரு நெருக்கமான பாடல் காட்சி இயல்பாக வர வேண்டும் என்பதற்காக சுஷாந்த்தையும், பரினீதியையும் 3 நாட்கள் அறையில் அடைத்து தனிமையில் வைத்திருந்தார் இயக்குநர்.

நெருக்கமோ நெருக்கம்...
அதன் பின்னர் அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கியபோது எதிர்பார்த்ததை விக ஏக நெருக்கத்துடன் இருவரும் பின்னிப் பிணைந்து நடித்து அசத்தினர்.

முத்தமழை...
இந்த நிலையி்ல் தற்போது பரினீதிக்கும், இன்னொரு நாயகியான வாணி கபூருக்கும் இப்படத்தில் சுஷாந்த் ஏகப்பட்ட முத்தங்களை வாரி வழங்கிய புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

6 உதடுகள்... 27 முத்தங்கள்
-
பரினீதிக்கும், வாணிக்கும், சுஷாந்த் இப்படத்தில் மொத்தம் 27 முத்தம் கொடுத்துள்ளாராம்.

அடுத்த சீரியல் கிஸ்ஸர் இவர்தான்...
இதனால் ஹஸ்மியை இவர் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் என்று இப்போதே பேச ஆரம்பித்து விட்டனராம் பாலிவுட்டில்.
நடிக்கிறாங்களோ இல்லையோ.. நல்லா கடிக்கிறாங்கய்யா உதடுகளை...!


Click it and Unblock the Notifications











