twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரியாவால் சுஷாந்த் உயிருக்கு ஆபத்து இருந்துள்ளது.. முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட குடும்பத்தினர்!

    |

    சென்னை: ரியா சக்ரபர்த்தியால் சுஷாந்தின் வாழ்க்கை ஆபத்தில் இருந்துள்ளது என்பதற்கான ஆதாரத்தை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

    Recommended Video

    Sushant Singh case Complications • Final Details

    பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் நாட்டையே உலுக்கியது.

    இந்நிலையில் சுஷாந்தின் தந்தை போலீஸில் கடந்த வாரம் புகார் ஒன்றை அளித்தார். அதில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்திதான் அவரது மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

    பிளீஸ்னா..எனக்கு முன் ஜாமின் வாங்கிக் கொடுங்கண்ணா.. பிரபல நடிகரிடம் கோரிக்கை வைத்த சூரியா தேவி! பிளீஸ்னா..எனக்கு முன் ஜாமின் வாங்கிக் கொடுங்கண்ணா.. பிரபல நடிகரிடம் கோரிக்கை வைத்த சூரியா தேவி!

    கட்டுப்பாட்டில்

    கட்டுப்பாட்டில்

    ரியா சக்ரபர்த்தி சுஷாந்தை, குடும்பத்தினருடன் கூட பேச விடாமல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட அவர்தான் காரணம் என்றும் கூறியிருந்தார். மேலும் சுஷாந்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரியா சக்ரபர்த்தியின் வங்கி கணக்குக்கு 15 கோடி ரூபாய் பணம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    ஆதாரங்கள் வெளியீடு

    ஆதாரங்கள் வெளியீடு

    இதனை தொடர்ந்து ரியா சக்ரபர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங் ரியா சக்ரபர்த்தியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களை அவரது குடும்பத்தார் வெளியிட்டுள்ளனர்.

    ரிசார்ட்டில் 3 மாதங்கள்

    ரிசார்ட்டில் 3 மாதங்கள்

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தினர் மும்பை காவல்துறைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் சாட்டின் ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டு, நடிகரின் உயிருக்கு ஆபத்து இருந்துள்ளது என தெரிவித்துள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி அவரை மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ரிசார்ட்டில் மூன்று மாதங்கள் வைத்திருந்தார் என்பதும் அந்த சாட்டில் தெரியவந்துள்ளது.

    குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்

    குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்

    இந்த சாட் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. சுஷாந்த் குடும்பத்தின் சட்ட ஆலோசகரான விகாஸ் சிங் இதற்கு முன்னர் இந்தியா டுடேக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இதைப் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், சுஷாந்தின் குடும்பத்தினர் மும்பை காவல்துறையினருக்கு இதனை தெரியப்படுத்தியுள்ளனர் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டனர்.

    தெளிவாக தெரிகிறது

    தெளிவாக தெரிகிறது

    அதேநேரத்தில் சுஷாந்த் முற்றிலும் "ரியா சக்ரவர்த்தியின் கட்டுப்பாட்டின் கீழ்" இருந்தார் என்பதை குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர் என்பதும் அந்த உரையாடலில் தெளிவாகத் தெரிகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    பிப்ரவரி மாதமே புகார்

    பிப்ரவரி மாதமே புகார்

    சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தின் சட்ட ஆலோசகர் விகாஸ் சிங் ஏற்கனவே ஒரு முறை ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி பாந்த்ரா போலீசாருக்கு தெரிவித்ததாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர்களை வலியுறுத்தினர், ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

    முதல்வர் தலையிட்டதால்..

    முதல்வர் தலையிட்டதால்..

    மேலும் பீகார் காவல்துறையினர் கூட சில "உயர் நபர்கள்" சம்பந்தப்பட்டதால் இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய விரும்பவில்லை. ஆனால் முதல்வர் நிதீஷ் குமார் தலையிட்ட பின்னர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. "எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நாங்கள் பீகார் போலீஸை அணுகியபோது, ​​உயர் நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர்.

    முதல்வருக்கு நன்றி

    முதல்வருக்கு நன்றி

    எங்கள் கோரிக்கையை கருத்தில் கொண்டு அமைச்சர் சஞ்சய் ஜா இந்த விவகாரத்தில் ஈடுபட்டதற்கு முதல்வர் நிதீஷ் குமாருக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர் இந்த விஷயத்தை போலீசாரிடம் விளக்கிய பிறகுதான் ​​எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது, இவ்வாறு சுஷாந்தின் குடும்ப வழக்கறிஞரான விகாஸ் சிங் தெரிவித்தார்.

    முதல்வருக்கு நன்றி

    முதல்வருக்கு நன்றி

    எங்கள் கோரிக்கையை கருத்தில் கொண்டு அமைச்சர் சஞ்சய் ஜா இந்த விவகாரத்தில் ஈடுபட்டதற்கு முதல்வர் நிதீஷ் குமாருக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர் இந்த விஷயத்தை போலீசாரிடம் விளக்கிய பிறகுதான் ​​எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது, இவ்வாறு சுஷாந்தின் குடும்ப வழக்கறிஞரான விகாஸ் சிங் தெரிவித்தார்.

    English summary
    Sushant Singh Rajput family has released the proof of Sushant life was in danger. They have released whats app screen shots.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X