twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்தின் உறவினர் ரியா சக்ரபர்த்தியை அழைத்து அறைய சொன்னார்.. பகீர் கிளப்பும் மும்பை போலீஸ்!

    |

    சென்னை: சுஷாந்தின் உறவினரான போலீஸ் அதிகாரி ஒருவர் ரியா சக்ரபர்த்தியை கஸ்டடியில் வைத்து அறைய சொன்னார் என மும்பை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    34 வயதான இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது மரணம் குறித்த வழக்குப் பதிவு செய்த மும்பை போலீஸ் இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் சுஷாந்தின் தந்தை அவரது காதலியான ரியா சக்ரபர்த்தி மீது பீகார் போலீஸில் புகார் அளித்தார்.

    ஆதாரங்கள் அழிக்கப்பட வேண்டும் என காத்திருக்கிறது மும்பை போலீஸ்.. சுஷாந்த் குடும்ப வக்கீல் விளாசல்! ஆதாரங்கள் அழிக்கப்பட வேண்டும் என காத்திருக்கிறது மும்பை போலீஸ்.. சுஷாந்த் குடும்ப வக்கீல் விளாசல்!

    சுஷாந்தின் மைத்துனர்

    சுஷாந்தின் மைத்துனர்

    இதுதொடர்பாக விசாரிக்க வந்த பீகார் ஐஏஎஸ் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டதால் இந்த விவகாரம் பூதாகரமானது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை பிசிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பை போலீஸ் துணை கமிஷனர் பரம்ஜித் சிங் தஹியா, சுஷாந்தின் மைத்துனரான மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஓபி சிங் மீது பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

    கட்டுப்பாட்டுக்குள்..

    கட்டுப்பாட்டுக்குள்..

    அதாவது, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மைத்துனரும், ஹரியானா காவல்துறையின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஓ.பி.சிங் ரியா சக்ரபர்த்தியை அழைத்து அழுத்தம் கொடுக்குமாறு கூறினார். அவர்கள் ரியா, சுஷாந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக கூறினார்கள் என்றார்.

    இன்ஃபார்மல் கோரிக்கை

    இன்ஃபார்மல் கோரிக்கை

    மேலும், நடிகரின் குடும்பத்தினர் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கவில்லை என்றார். பிப்ரவரி 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வாட்ஸ்அப் செய்திகளின் மூலம் ஓ.பி. சிங் தன்னிடம் அவர்களின் உறவை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக ரியா சக்ரவர்த்திக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இன்ஃபார்மலாக கோரிக்கை விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

    கஸ்டடியில் வைக்கனும்

    கஸ்டடியில் வைக்கனும்

    ஓபி சிங் பிப்ரவரி 5 ம் தேதி மும்பைக்கு வந்ததாகவும், அவர் மும்பையில் இருப்பதாக சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு தெரிவிக்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மிரண்டா என்பவரை எந்தவொரு புகாரும் விசாரணையும் இல்லாமல், ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார், எனவும் கூறினார்.

    தந்தை குற்றச்சாட்டு

    தந்தை குற்றச்சாட்டு

    ஆனால் யாரையும் அழைத்து கஸ்டடியில் வைக்க முடியாது என ஓபி சிங்கிடம் தான் தெரிவித்துவிட்டதாகவும் டிசிபி பரம்ஜித்சிங் தஹியா கூறியுள்ளார். பிப்ரவரி 25ஆம் தேதியே சுஷாந்தை காப்பாற்றுமாறு மும்பை போலீஸ்க்கு தகவல் தெரிவித்ததாக சுஷாந்தின் தந்தை கூறிய நிலையில் மும்பை டிசிபி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

    English summary
    Mumbai DCP says Sushant relative asked me to keep Rhea in cutody to end up their relationship. He aslo asked me to slap her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X