தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசி படம்.. 'தில் பெச்சாரா' மேலும் ஓர் ஆஹா சாதனை!

By

மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா படம் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.

Recommended Video

காதல் மன்னன் RANBIR KAPOOR | ASHWIN ANALYSE | FILMIBEAT TAMIL

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

இது இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் அதிக பிரபலமடைந்தவர்.

தில் பெச்சாரா

தில் பெச்சாரா

மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலைக்கானக் காரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த படம், தில் பெச்சாரா. சஞ்சனா சங்கி, சைஃப் அலி கான் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை, முகேஷ் சாப்ரா இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

கேன்சர் நோயாளிகள்

கேன்சர் நோயாளிகள்

இந்தப் படத்தை வாங்கிய டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம், கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியிட்டது. ஹாலிவுட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான The Fault in Our Stars என்ற படத்தின் ரீமேக் தான் இந்தப் படம். இரண்டு கேன்சர் நோயாளிகள் எப்படி காதலித்து தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள் என்பது கதை.

இலவசமாக வெளியிட்டது

இலவசமாக வெளியிட்டது

சுஷாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தப் படத்தை அனைத்து ரசிகர்களும் பார்ப்பதற்காக இலவசமாகவே வெளியிட்டது டிஸ்னி. படத்தை ஒரே நாளில் 95 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருந்தனர். OTT தளத்தில் அதிக பார்வையாளர்களை கொண்ட படமாக இது சாதனை செய்திருந்தது. ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு 2 ஆயிரம் கோடி வசூலானதாகவும் கூறப்பட்டது.

மேலும் ஒரு சாதனை

மேலும் ஒரு சாதனை

இதற்கு முன்பு பாகுபலி, தங்கல் ஆகிய படங்கள்தான் 2000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்திருந்தது. அதனை தில் பெச்சாரா ஒரே நாளில் முறியடித்திருந்தது. இதை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த படம் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. படம் வெளியான ஒரு வாரத்தில், ஸ்மார்ட் போன்களில் அதிகம் பேர் பார்த்த, ஒடிடியில் வெளியான படமாக, தில் பெச்சாரா சாதித்துள்ளது.

மஸ்த்ரம் தொடர்

மஸ்த்ரம் தொடர்

இதை தொலைக்காட்சி பார்வையாளர்கள் கண்காணிப்பு நிறுவனமான BARC மற்றும் நீல்சன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வெப்சீரிஸ்களில் மஸ்த்ரம் முதலிடத்தில் இருக்கிறது. பண்டிஸ் பண்டிட்ஸ், டேஞ்சரஸ், ஆர்யா ஆகிய தொடர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X