அங்கிதா போல் தன்னை யாரும் காதலிக்கவில்லை.. அடிக்கடி உடைந்துபோன சுஷாந்த்.. மருத்துவரின் திடுக் தகவல்!

சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அங்கிதா போன்று தன்னை யாரும் காதலிக்கவில்லை என அடிக்கடி உடைந்து போனதாக அவரது மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Sushant Singh இறந்த பின் கிடைக்கும் அங்கிகாரம் | Remembering

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14 ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதீத மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவரது தற்கொலைக்கு காரணம் சில பாலிவுட் பிரபலங்கள்தான் என குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் பீகாரை சேர்ந்தவர் என்பதால் சில டாப் சினிமா பிரபலங்கள் அவரை ஓரம் கட்டியதாக கூறப்படுகிறது.

பார்ட்டிகள்

பார்ட்டிகள்

இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இழந்தார் சுஷாந்த். 6 மாதங்களில் சுஷாந்த் 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் பாலிவுட் நட்சத்திரங்கள் கொண்டாடிய எந்தப் பார்ட்டிக்கும் அழைக்கப்படாமல் ஒதுக்கி வைத்ததாகவும் தெரிகிறது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

பாலிவுட் நட்சத்திரங்கள் கொடுத்த நெருக்கடியால்தான் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பலரிடம் விசாரணை

பலரிடம் விசாரணை

மேலும் சுஷாந்தினுடன் தொடர்பில் இருந்த பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலிவுட்டில் இருந்த நெப்போட்டிஸம், சுஷாந்த் மரணத்துக்கான காரணம் உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலிடம் விசாரணை

காதலிடம் விசாரணை

போலீசாரின் இந்த விசாரணை பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்தின் நண்பர்கள், அவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சைப் பெற்று வந்த மனநல மருத்துவர், அவரது காதலியான ரியா சக்ரபர்த்தி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சண்டை போட்டேன்

சண்டை போட்டேன்

அதன்படி நேற்று சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தானும் சுஷாந்தும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்தது உண்மைதான். நவம்பரில் திருமணம் செய்து கொள்ள இருந்தோம், பின்னர் பிரிந்துவிட்டோம், அவருடன் சண்டை ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்தேன் என்று கூறினார்.

முக்கிய தகவல்

முக்கிய தகவல்

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்து வந்த, மருத்துவர் கேசரி சவ்டாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரது அளித்த தகவல்களையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். சுஷாந்த் குறித்து பல முக்கிய தகவல்களை அவர் கூறியுள்ளார்.

தூங்க முடியவில்லை

தூங்க முடியவில்லை

மன அழுத்தத்தால் சுஷாந்த் சிங் ராஜ்புத் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இரவில் அவரால் தூங்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நடிகர் சுஷாந்த் சிங் விசித்திரமான எண்ணங்களைக் கொண்டிருந்தார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அங்கிதா போல்...

அங்கிதா போல்...

அங்கிதா லோகெண்டேவை பிரிந்த பிறகு, மேலும் சில காதல் தோல்விகளை சுஷாந்த் சந்தித்ததாகவும், இதன் மூலம் அங்கிதாவை போல் தன்னை யாரும் உண்மையாக காதலிக்கவில்லை என்று அவர் உணர்ந்ததாக மருத்துவர் கேசரி சவ்டா கூறியுள்ளார்.

வொர்க்கவுட் ஆகவில்லை

வொர்க்கவுட் ஆகவில்லை

மேலும் ராப்டா படத்தில் தன்னுடன் நடித்த நடிகை க்ரீத்தி சனோன் மற்றும் இயக்குநர் ஒருவரின் மகள் என சுஷாந்த் அடுத்தடுத்து காதல் உறவில் இருந்ததாகவும், ஆனால் அவை அவருக்கு வொர்க்கவுட் ஆகவில்லை என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

பைபோலர் மைண்ட்

பைபோலர் மைண்ட்

நடிகர் சுஷாந்த் தனது காதலியான ரியா சக்ரபர்த்தியுடனும் சந்தோஷமாக இல்லை என்றும் அவரது நடத்தை அவருக்கு பிடிக்காமல் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் பைபோலர் மைண்டில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கடைசிப்படம்

கடைசிப்படம்

கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற சுஷாந்தின் இறுதிச்சடங்கில் அவருடன் நடித்த சக நடிகைகளான ஷ்ரதா கபூர், க்ரித்தி சனோன், ரன்வீர் ஷோரே உள்ளிட்ட பலர் பங்கேற்றர். சுஷாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான ச்ஹிச்சோரே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X