சிபிஐ விசாரணை தீவிரம்.. சுஷாந்த் சிங் நண்பர், மானேஜர் முன்பு நடிகை ரியாவிடம் சரமாரி கேள்வி!
மும்பை: நடிகை ரியா சக்கரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள், நான்காவது நாளாக இன்றும் விசாரித்து வருகின்றனர்.
Recommended Video
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14- ஆம் தேதி அவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. அவரது மரணம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணமோசடி
இதுகுறித்து மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு புகார் அளித்தார். அதில், சுஷாந்த் சிங்கை அவர்தான் தற்கொலைக்கு தூண்டினார் என்றும், பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அமலாக்கத்துறை
இதுபரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை ரியா மீது கூறப்பட்ட பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, நடிகை ரியாவிடமும் அவர் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தியது. அவர்கள் பல மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணையில் பணமோசடி தொடர்பாகவும் நடிகை ரியாவுக்கு எதிராகவும் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

விருந்தினர் மாளிகை
இந்நிலையில் பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று, சுஷாந்த் சிங் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து மும்பை வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், சாந்தா குரூஸில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த விசாரணையை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்தார்த் பிதானி
சுஷாந்த் சிங்குடன் தங்கியிருந்த அவர் நண்பர் சித்தார்த் பிதானி, ராஜத் மேவதி, சாமுவேல் மிரந்தா, சமையல்காரர் நீரஜ் சிங், வேலைக்காரர் கேசவ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நடிகை ரியாவிடம் கடந்த வெள்ளிக்கிழமை பத்து மணி நேரம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினமும் நேற்றும் அவரிடம் விசாரணை நடத்தினர். நேற்று அவர் சகோதரர் சோவிக்கும் ஆஜரானார்.

நேருக்கு நேராக
இந்த விசாரணையில் சித்தார்த் பிதானி, மானேஜர் சாமுவேல் ஆகியோரை நேருக்கு நேராக அமரவைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த விசாரணை இன்றும் தொடர்கிறது. இன்றும் நடிகை ரியா சக்கரவர்த்தி சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி உள்ளார். நேற்று அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ, இன்றும் தொடர்ந்து கேள்விகள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











