twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆதாரங்கள் அழிக்கப்பட வேண்டும் என காத்திருக்கிறது மும்பை போலீஸ்.. சுஷாந்த் குடும்ப வக்கீல் விளாசல்!

    |

    மும்பை: சுஷாந்த் மரணம் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மும்பை போலீஸ் காத்திருப்பதாக அவரது குடும்ப வக்கீலான விகாஸ் சிங் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Sushant Singh case Complications • Final Details

    சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னா போலீஸில் ரியா சக்கரவர்த்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் புகார் அளித்துள்ளார். சுஷாந்தின் மரணத்திற்கு ரியாவும் அவரது குடும்பத்தினருமே காரணம் என தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து ரியா சக்கரவர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சுஷாந்தின் குடும்பத்தினர் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆதாரமாக வெளியாகி வருகிறது.

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை!பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரை!

    வினய் திவாரி

    வினய் திவாரி

    இந்நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து விசாரிக்க பீகார் போலீசார், ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரி தலைமையில் மும்பை வந்துள்ளனர். அவர்களுக்குச் சரியான ஒத்துழைப்பு கொடுக்காத மும்பை போலீசார், வினய் திவாரியை கட்டாயமாகத் தனிமைப்படுத்தி உள்ளனர்.

    ஆதாரங்களை அழிக்கவே..

    ஆதாரங்களை அழிக்கவே..

    மும்பை போலீசாரின் இந்த செயல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் குடும்ப வழக்கறிஞரான விகாஸ் சிங், ஆதாரங்களை அழிக்கவே இப்படி ஒரு நாடகம் அரங்கேற்றப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    விசாரணையை முடக்க

    விசாரணையை முடக்க

    மேலும் எந்தவொரு மாநில அரசாங்கமும் ஒரு அமலாக்க அதிகாரியை தனிமைப்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு போலீஸ் அதிகாரியை தனிமைப்படுத்துவது என்பது பாட்னா காவல் துறையினரின் விசாரணையை முடக்க அல்லது தடுக்க விரும்புகிறது என்றே அர்த்தம் என கூறியுள்ளார்.

    சுஷாந்தின் அப்பா

    சுஷாந்தின் அப்பா

    மேலும் சுஷாந்த் மரணம் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்படுவதை உறுதி செய்யவே மும்பை போலீஸ் இப்படி நேரம் கேட்கிறது என்றும் கடுமையாக சாடியிருக்கிறார். இதன் காரணமாகதான், சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவரது தந்தை கேட்பதாகவும் விகாஸ் சிங் தெரிவித்துள்ளார்.

    English summary
    Sushant singh family lawyer accusing Mumbai Police. Vikas Singh says Mumbai Police buing time to destroy the evidence.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X