எவ்வளவு பெரிய குற்றம்.. இதுதான் சுஷாந்த் மரணத்திற்கு வழிவகுத்தது.. புட்டு புட்டு வைக்கும் வழக்கறிஞர்

மும்பை: நடிகர் சுஷாந்துக்கு அவருக்கே தெரியாமல் போதை மருந்து கொடுக்கப்பட்டதுதான் அவரது மரணத்திற்கு வழி வகுத்தது என சுஷாந்தின் குடும்ப வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

Sushant Singh case Complications • Final Details

நடிகர் சுஷாந்த் மரணமடைந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. ஆனாலும் நாள் தோறும் அவரது மரணம் தொடர்பாக ஏதாவது ஒரு தகவல் பூதாகரமாக கிளம்பி கொண்டிருக்கிறது.

சுஷாந்த் வழக்கை கையில் எடுத்துள்ள சிபிஐ, அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறது. இதில் பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

வாட்ஸ் அப் சாட்

வாட்ஸ் அப் சாட்

சுஷாந்த் மரணத்திற்கு அவரது காதலியான ரியா சக்ரவர்த்தியும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம் என ரசிகர்களும் சுஷாந்தின் குடும்பத்தினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல் ரியா சக்ரவர்த்தியின் வாட்ஸ் அப் சாட்டுகளும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மகேஷ் பட்டுடன் சாட்

மகேஷ் பட்டுடன் சாட்

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியாவின் கட்டுப்பாட்டில்தான் சுஷாந்த் இருந்தார் என்பதை நிரூபிக்கும் வகையிலான வாட்ஸ் அப் மெஸேஜ்கள் வைரலானது. அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் மகேஷ் பட்டுடன் ரியாவுக்கு இருந்த தொடர்பை அம்பலப்படுத்தும் வகையில் சில மெஸேஜ் ஸ்க்ரீன்ஷாட்டுகள் வைரலானது.

4 சொட்டு.. 30 நிமிடத்திற்கு..

4 சொட்டு.. 30 நிமிடத்திற்கு..

இந்நிலையில் ரியா சக்ரவர்தத்தி சுஷாந்துக்கு தெரியாமல் அவருக்கு தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை கொடுத்தது வாட்ஸ்அப் மெஸேஜ் மூலம் அம்பலமாகியுள்ளது. ஜெயா சாகா என்பவர், ரியாவுக்கு அனுப்பிய மெஸேஜில் காபி, டீ அல்லது தண்ணீரில் 4 சொட்டு கலந்து அவருக்கு குடிக்க கொடு என்றும், 30 லிருந்து 40 நிமிடங்களுக்கு ஒரு முறை கொடு என்றும் கூறியுள்ளார்.

மரணத்திற்கு காரணம்

மரணத்திற்கு காரணம்

இந்த மெஸேஜ் ஸ்க்ரீன்ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசியியுள்ள சுஷாந்தின் குடும்ப வழக்கறிஞரான விகாஸ் சிங், சுஷாந்துக்கே தெரியாமல் அவர் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை உட்கொண்டுள்ளார். இதுதான் அவரது மரணத்திற்கு வழி வகுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

அப்படி நினைத்தோம்

அப்படி நினைத்தோம்

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, எங்கள் எஃப்.ஐ.ஆரில், அவர் அதிகப்படியான போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதைக் குறிப்பிட்டுள்ளோம். இது ஒரு மருத்துவர், ஒரு மனநல மருத்துவரால் நிர்வகிக்கப்படும் சில மருந்து என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால் இப்போது எல்லாம் வெளிப்பட்டுவிட்டது.

பெரும் குற்றம்

பெரும் குற்றம்

அநேகமாக, அவர் உண்மையில் போதைப்பொருள் உட்கொண்டிருக்கிறார். அதாவது ஒருவருக்கு அவரது மனதைக் கட்டுப்படுத்த இந்த ஹார்ட்கோர் மருந்துகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சுஷாந்திற்கு செய்யப்பட்டுள்ள இந்த செயல் மிகவும் சட்டவிரோதமானது மற்றும் பெரும் குற்றம் ஆகும். இந்த மருந்துகள் அவரைக் கட்டுப்படுத்தவோ, அவரை அமைதிப்படுத்தவோ அல்லது அவரை வசப்படுத்தவோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரியா பார்ட்டி

ரியா பார்ட்டி

அதைத்தான் அவர் வீட்டு வேலைக்காரர்களும் அவர் க்ரண்வுட் ஃபுளோரில் தூங்கிக் கொண்டிருந்தார் என்று சொல்கிறார்கள். அவர் ஆறாவது மாடி மற்றும் ஏழாவது மாடியில் டூபளக்ஸ் வீடு வைத்திருந்தார். அவர் ஒரு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார், மற்ற மாடியில் பார்ட்டிகள் நடந்து கொண்டிருந்தன. ரியா ஒரு மாடியில் பார்ட்டி பண்ணுவார், சுஷாந்த் மற்றொரு மாடியில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அவருக்கே தெரியாமல்

அவருக்கே தெரியாமல்

எனவே, போதைப் பொருள் உட்கொண்டது உண்மைதான். எஃப்.ஐ.ஆரில் நாங்கள் கூறிய அர்த்தத்தில் உள்ள போதைப்பொருள் அல்ல, உண்மையான போதைப்பொருள். அவருக்குத் தெரியாமல், அவருடைய விருப்பத்திற்கு மாறாக அவர் உட்கொண்டிருக்கிறார் என்பதும், அந்த போதைப்பொருளின் நோக்கம் அவரை கட்டுப்படுத்தி அல்லது வசப்படுத்தி வைப்பதுதான். அவை அவரது மனதை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. அதுவே இறுதியில் அவரது மரணத்திற்கு வழிவகுத்தது, என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X