காதலியுடன் சேர்ந்து தோனி மகள் ஸிவாவை கொண்டாடிய சுஷாந்த்.. நெஞ்சைப் பிழியும் போட்டோ!

சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது முன்னாள் காதலியான அங்கிதா லோகண்டேவுடன் கிரிக்கெட் வீரர் தோனியின் மகளை கொஞ்சிய போட்டோக்கள் வைரலாகியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்ததாக தெரிகிறது.

அவரது மரணம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் குடும்பத்தினர், நண்பர்கள், காதலி, திரைத்துறை சம்பந்தப்பட்டவர்கள் என அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசுமையான தருணங்கள்

பசுமையான தருணங்கள்

சுஷாந்த் மரணம் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது. பலரும் சுஷாந்துடன் இருந்த பசுமையான தருணங்களை உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர். அவருடைய உருக்கமான போட்டோவையும் ஷேர் செய்து வருகின்றனர்.

ஹெலிகாப்டர் ஷாட்

ஹெலிகாப்டர் ஷாட்

சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து நாடு முழுக்க பிரபலமானார். இந்தப் படத்தின் மூலம் தோனியின் ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார். தோனி போன்ற அங்க அசைவுகளை அக்யூரட்டாக கொடுத்த சுஷாந்த், ஹெலிகாப்டர் ஷாட்டையும் அடித்து மிரள விட்டார்.

தோனியின் மேனரிசங்கள்

தோனியின் மேனரிசங்கள்

தோனியின் மேனரிசங்களை கற்றுக்கொள்ள அவருடன் நெருக்கமாக பழகினார். இந்நிலையில் சுஷாந்த் தனது முன்னாள் காதலியான அங்கிதா லோகண்டேவை காதலித்த போது அவருடன் சேர்ந்து தோனியின் குடும்பத்தை சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் தோனியின் மகளுடன் கொஞ்சி விளையாடி போட்டோக்கள் எடுத்தனர்.

6 வருட காதல்

6 வருட காதல்

தற்போது அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்கிதாவும் சுஷாந்தும் 6 வருடங்கள் உயிருக்கு உயிராய் காதலித்தனர். கடந்த 2016ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். அதன் பின்பு தனது மரணம் வரை, அங்கிதாவை தான் மிஸ் பண்ணிவிட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார் சுஷாந்த்.

Recommended Video

Sushant Singh இறப்பில் தொடரும் மர்மம் | Body Decoding
உண்மையாக காதலிக்கவில்லை

உண்மையாக காதலிக்கவில்லை

அதன்பிறகு, ரியா சக்ரபர்த்தி உட்பட நடிகைகளுடன் காதல் உறவில் இருந்தபோதும் அவர்கள் யாரும் அங்கிதா அளவுக்கு சுஷாந்தின் மனதில் இடம்பிடிக்கவில்லை. அங்கிதாவை போல் தன்னை யாரும் உண்மையாக காதலிக்கவில்லை என தனது மனநல மருத்துவரிடம் உருக்கமாக கூறியிருந்தார் சுஷாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X