twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்தின் பிரேத பரிசோதனை மிகவும் தாமதமாக நடத்தப்பட்டுள்ளது.. தடயவியல் அதிகாரி போட்ட புது குண்டு!

    |

    சென்னை: மறைந்த நடிகர் சுஷாந்தின் பிரேத பரிசோதனை மிகவும் தாமதமாக நடத்தப்பட்டுள்ளதாக தடயவியல் துறையின் உயர் அதிகாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Recommended Video

    Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

    பாலிவுட் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் ஒரு திட்டமிடப்பட்ட கொலை என அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சுஷாந்தின் மரண வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ளது. சுஷாந்த் வீட்டில் பணிபுரிந்தவர்கள், அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகர் விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள்.. ஊமை விழிகள் டு ரமணா.. அசர வைக்கும் அவரது டாப் 5 படங்கள்! நடிகர் விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள்.. ஊமை விழிகள் டு ரமணா.. அசர வைக்கும் அவரது டாப் 5 படங்கள்!

    அப்பாக்கள்தான் காரணம்

    அப்பாக்கள்தான் காரணம்

    அதேநேரத்தில் சுஷாந்தின் மரணம் தொடர்பாக நாள்தோறும் ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது. சுஷாந்தின் ஜிம் பார்ட்னரான சுனில் சுக்லா, சுஷாந்தை கொலை செய்தது ரியா சக்ரவர்த்தியின் அப்பாவும் மகேஷ் பட்டும்தான் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

    பிரேத பரிசோதனை

    பிரேத பரிசோதனை

    இந்நிலையில் தடயவியல் துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் சுஷாந்தின் பிரேத பரிசோதனை பல மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் நடந்துள்ளதாக கூறி பகீர் கிளப்பியுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த அந்த தடயவியல் உயர் அதிகாரி, ஒரு உடலில் உள்ள ரசாயனத்தின் தடயங்கள் ஆறு மணி நேரம் நீடிக்கும் என்றும், சுஷாந்தின் பிரேத பரிசோதனை மிகவும் தாமதமாக செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    தாமதமாக பிரேத பரிசோதனை

    தாமதமாக பிரேத பரிசோதனை

    அதாவது நடிகர் சுஷாந்தின் பிரேத பரிசோதனை அவரது உடல் மீட்கப்பட்டு சுமார் 10 மணி நேரத்திற்குப் பிறகே நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த மற்றொரு தடயவியல் நிபுணர், தடயவியல் அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி சுஷாந்தின் மரண வழக்கில் ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

    பல்வேறு சந்தேகங்கள்

    பல்வேறு சந்தேகங்கள்

    அவரை தொடர்ந்து எய்ம்ஸ் தடயவியல் துறை தலைவர் டாக்டர் சுதிர் குப்தா, நடிகர் சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் நேர முத்திரை இல்லை என்று கூறியிருந்தார். சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் அது தொடர்பான அறிக்கையில் உள்ள குளறுபடிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக சுஷாந்தின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

    வேறு காரணமா?

    வேறு காரணமா?

    உடல் உடனடியாக மீட்கப்பட்ட போதும் ஏன் தாமதமாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஏதாவது நிர்ப்பந்தத்தினால பிரேத பரிசோதனை தாமதிக்கப்பட்டதா என்றும் அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

    English summary
    Sushant Singh Rajput Autopsy was done much later says forensic officer. He also says toxic trace will be in body for 6 hours only, But Sushant Singh Rajput autopsy was done by 10 hours later.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X