For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மரணத்திற்கு முந்தைய நாள் சந்தேகத்திற்கிடமான நடத்தையுடன் காணப்பட்ட சுஷாந்த்.. வெளியான பகீர் தகவல்!

  |

  சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு முந்தைய நாள் சந்தேகத்திற்கிடமான நடத்தையுடன் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

  அவரது மரணம் கொலையான அல்லது தற்கொலையா என சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்கு போதை மருந்து கொடுத்த வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியாயின.

  ப்பா.. நம்ம ஷாலு ஷம்முவா இது.. கேரள சேலையில் செம கிளாமர்.. டாப் ஆங்கிளில் வளைச்சு வளைச்சு.. ரணகளம்!

  பகீர் தகவல்கள்

  பகீர் தகவல்கள்

  இதனால் போதை பொருள் தடுப்பு பிரிவினர் தலையிட விவகாரம் வேறுமாதிரி சென்று கொண்டிருக்கிறது. முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் இதில் சிக்குவார்கள் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கொலை கோணத்தில்

  கொலை கோணத்தில்

  அதன்படி சுஷாந்த் சிங்கிடம் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் அவரது நண்பர்கள் அளித்த தகவல்களிலும் முரண்பாடுகள் இருப்பதையும் ஆராய தொடங்கியுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு விசாரணையில் ‘மரண நாள்' முரண்பாடு ‘கொலை' கோணத்தில் விசாரிக்க முக்கிய லீடுகள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  சந்தேகத்திற்கிடமாக

  சந்தேகத்திற்கிடமாக

  சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தொலைபேசி பயன்பாடு 'அவரது உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக' அவர் 'சந்தேகத்திற்கிடமான நடத்தையுடன்' இருந்ததை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  நண்பர்கள்

  நண்பர்கள்

  இந்த வழக்கில் பிரதான குற்றம் சாட்டப்பட்ட ரியா சக்ரவர்த்தியைத் தவிர, மறைந்த நடிகர் சுஷாந்தின் ஊழியர்களையும் அவரது நண்பர்களையும் தாங்கள் அளித்த தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் புலனாய்வு அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.

  வயிற்றில் எதுவுமில்லை

  வயிற்றில் எதுவுமில்லை

  உதாரணமாக சுஷாந்தின் சமையல்காரரான நீரஜ், சுஷாந்த் சடலமாக கண்டெடுக்கப்படுவதற்கு முன்பு அதாவது ஜூன் 14ஆம் தேதி காலை சுஷாந்த் ஜூஸ் குடித்ததாக கூறினார். ஆனால் சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது வயிற்றில் எதுவுமே இல்லை காலியாக இருந்தது என தெரிவித்துள்ளது.

  குறுஞ்செய்தி..

  குறுஞ்செய்தி..

  இதேபோல் தீப்பேஷ் சாவந்த காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை கதவை தட்டிக் கொண்டிருந்ததாக கூறியுள்ள நிலையில், விளம்பரம் தொடர்பான ஒரு விஷயத்திற்காக அவர் மற்றொரு நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பியது ஏன் என்ற கேள்வியையும் விசாரணை அமைப்புகள் எழுப்பியுள்ளன.

  மாயமான வாட்ச்

  மாயமான வாட்ச்

  இதனிடையே சுஷாந்தின் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த வாட்ச் மாயமாகியுள்ளது. இந்த வாட்ச் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் டிராயரில் இருந்து காணாமல் போயுள்ளது. நடிகரின் குடும்பத்திற்கு ஏன் வீட்டின் சாவி வழங்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

  சலனமே இல்லாமல் சமையல்

  சலனமே இல்லாமல் சமையல்

  மேலும் முக்கியமாக மறைந்த நடிகரின் உடலைப் பெற அவரது குடும்பத்தினர் சென்றபோது வீட்டில் வழக்கமான சூழ்நிலையே இருந்ததாகவும், யாரும் கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் இருந்துள்ளனர். வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்களுக்கு உணவு சமைப்பதும், உணவுக்குத் தயாராகி வருவதுமாக இருந்துள்ளனர். இதனை பார்த்து சுஷாந்தின் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்ததும் தெரியவந்துள்ளது.

  விளக்குகள் அணைப்பு

  விளக்குகள் அணைப்பு

  ஜூன் 13 ஆம் தேதி பிற்பகல் 2.22 மணிக்கு பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்பதையும் சிபிஐ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஜூன் 13 அன்று இரவு 10.30 மணிக்கு ராஜ்புத்தின் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டதாக அக்கம்பக்கத்தினர் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளனர்.

  Jayam Ravi நடிகைக்கு நீடிக்கும் Jail வாழ்க்கை • Radhika dwivedi
  நாளை அறிக்கை

  நாளை அறிக்கை

  அது வழக்கத்திற்கு மாறான ஒன்று என்றும் வழக்கமாக அதிகாலை 4 மணி வரை நடிகர் சுஷாந்த் வீட்டில் விளக்குகள் எரியும் அவர் விழித்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அனைத்து கண்களும் இப்போது எய்ம்ஸ் அறிக்கையின் மீது உள்ளன. சுஷாந்த் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதிலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

  English summary
  Sushant Singh Rajput behavior was suspicious before the day of his dead body found. His staffs and friends also given inconsistencies in statements.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X