சுஷாந்த் சிங் ராஜ்புத் பிளாக் மேஜிக் ஏவப்பட்டு கொல்லப்பட்டாரா? விலகும் மர்மங்கள் !

மும்பை : பிரபல தமிழ் நடிகை நீது சந்ரா பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் சுஷாந்த் சிங் மரணத்தில் பிளாக் மேஜிக் ஏவப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்ததை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சுஷாந்த் சிங் மரணத்திற்கு நீதி வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended Video

Sushant காதலி கண்கலங்கி நீதி கேட்டுள்ளார் • Rhea Chakraborty

நாளுக்கு நாள் சுஷாந்த் சிங்கின் தற்கொலை மரணத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள் மர்ம முடிச்சுகள் போல தொடர்ந்து கொண்டே போகின்றது.

இந்நிலையில் பிரபல செய்தி சேனலில் பணியாற்றும் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு சுஷாந்த் சிங்கின் தங்கை நீது சிங், ரியா சக்கரவர்த்தி பிளாக் மேஜிக் ஏவி சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தள்ளியதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

பாலிவுட் மாஃபியா

பாலிவுட் மாஃபியா

வாரிசு நடிகர்களின் தலையீடு, குழு செயல்பாடு, பாலிவுட் மாஃபியா, பெரிய நடிகர்களின் ஆதிக்கம் என பல விஷயங்கள் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் என இணைத்து பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது முழு கவனமும் அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மீது திரும்பியுள்ளது இந்த விஷயத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரை மாய்த்துக் கொண்டார்

உயிரை மாய்த்துக் கொண்டார்

சினிமா பின்னணி இன்றி ஹிந்தி திரையுலகில் நுழைந்து எண்ணற்ற நல்ல படங்களில் நடித்து வளர்ந்து வரும் நேரத்தில் உயிரை மாய்த்துக் கொண்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத். நாளுக்கு நாள் சுஷாந்த் சிங்கின் தற்கொலையின் மீது வெளியாகும் தகவல்கள் அவரின் மரணத்தின் மீது பரபரப்பை மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

மேரி டாக் கி மாருதி

மேரி டாக் கி மாருதி

இந்த தற்கொலையில் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருபவர் நடிகை ரியா சக்கரவர்த்தி. வட இந்திய சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து ஜொலிக்கும் ஒருசில நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகையும் சுஷாந்த் சிங்கின் காதலியுமான ரியா சக்கரவர்த்தி. தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த ரியா "மேரி டாக் கி மாருதி" என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

சுஷாந்த் விரும்பவில்லை

சுஷாந்த் விரும்பவில்லை

சுஷாந்த் சிங் ராஜ்புத் கலந்துகொண்ட ஒரு பட வெளியீட்டு விழாவில் ரியாவை சந்தித்ததில் இருந்து தொடங்கிய அவர்களின் நட்பு பின் காதலாக மாறியது. ஆனால் ரியாவின் காதலை ஒரு கட்டத்திற்கு மேல் சுஷாந்த் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.

ரியா தலைமறைவு

ரியா தலைமறைவு

இந்நிலையில்தான் சுஷாந்த் சிங்கின் தந்தை பீகார் காவல் நிலையத்தில் ரியாவின் மீது தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, தவறான தகவல்களை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ய ரியா சக்கரவர்த்தியை அணுகியபோது அவர் தற்பொழுது தலைமறைவு ஆகியுள்ளது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை கூட்டியுள்ளது.

தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக

தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான மர்யா சகில் தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷாந்த் சிங்கின் மீது ரியா "பிளாக் மேஜிக்" ஏவி விட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவரின் தங்கை நீது சிங் தற்பொழுது பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த பதிவு தற்பொழுது காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில் நடிகை நீது சந்ரா இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதைப்பற்றி ஒரு பதிவிட்டுள்ளார்.

சுக துக்கங்களில்

சுக துக்கங்களில்

நீது சந்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதைப்பற்றி பதிவிட்டுள்ளதாவது சுஷாந்த் சிங்கின் தங்கை மிது சிங் சொல்லியிருக்கும் செய்திகளை பார்த்தும் கேட்டும் அதிர்ந்து போயுள்ளேன். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தள்ளியுள்ள ரியா சக்கரவர்த்தியின் இந்த செயல் என்னை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒருவர் தன்னுடைய காதலியை தேர்ந்தெடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டும் சுக துக்கங்களில் பங்கேற்று எப்போதும் துணையாக இருப்பதை பார்த்துள்ளேன்.

கற்பனைக்கு எட்டாத

கற்பனைக்கு எட்டாத

ஆனால் சுஷாந்த் சிங்கின் இந்த விவகாரத்தில் நான் மிகவும் உடைந்து போய் உள்ளேன், இது கற்பனைக்கு எட்டாத அனைத்து எல்லைகளையும் தாண்டியுள்ளது, மேலும் இனி நான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு உறவும் சந்தேகத்துடன் பார்க்குமாறு ஆகிவிடுமோ என கேள்விக்குறியாகி உள்ளது.

சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு

சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள நீது சந்ரா மேலும் ரியா சக்கரவர்த்தி வழக்கில் சிபிஐ துரித நடவடிக்கை எடுத்து சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு விரைவில் நீதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X