twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த் சிங் விவகாரம்.. நடிகை ரியாவுக்கு மும்பை போலீஸ் பாதுகாப்பு.. சிபிஐ சொன்னதால் கிடைத்ததா?

    By
    |

    மும்பை: நடிகை ரியா சக்கரவர்த்திக்கு மும்பை போலீசார் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கி உள்ளனர். சிபிஐ சொன்னதால்தான் இந்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஜூன் மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

    அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக
    சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஓடிடியும் வேணாம்.. ஒரு புடலங்காயும் வேணாம்.. தியேட்டர தொறங்கடா..மன்சூர் அலிகான் பளீர் பேச்சு !ஓடிடியும் வேணாம்.. ஒரு புடலங்காயும் வேணாம்.. தியேட்டர தொறங்கடா..மன்சூர் அலிகான் பளீர் பேச்சு !

    வங்கி கணக்குகள்

    வங்கி கணக்குகள்

    இந்நிலையில், சுஷாந்த் சிங் தந்தை கே.கே.சிங், ரியா சக்கரவர்த்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பாட்னா போலீசில் புகார் கொடுத்தார். சுஷாந் சிங்கை, ரியாதான் தற்கொலைக்கு தூண்டினார் என்றும் சுஷாந்தின் வங்கி கணக்குகளை, அவர் கையாண்டு வந்ததாகவும் அவர் கணக்கில் இருந்து ரூ.15 கோடி ரூபாய் வரை, ரியாவுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    பணப் பரிமாற்றம்

    பணப் பரிமாற்றம்

    இதுபரபரப்பை ஏற்படுத்தியது. பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, நடிகை ரியாவிடமும் அவர் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தியது. அதில் ரியாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, சிபிஐ அதிகாரிகள் ரியாவிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியதாக கூறப்பட்டது.

    கொலை மிரட்டல்

    கொலை மிரட்டல்

    அதை மறுத்த அவர் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே, சிபிஐ-யிடம் இருந்து எந்த சம்மனும் வரவில்லை என்று சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு நேற்று ஆஜரான ரியாவிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, தனக்கு கொலை மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை மிரட்டல் வருவதாகவும் நடிகை ரியா கூறியிருந்தார்.

    வெளியே செல்வது?

    வெளியே செல்வது?

    பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன், நடிகை ரியாவின் தந்தை, அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு வெளியே சென்றபோது மீடியா சூழ்ந்துகொண்ட புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இப்படி இருந்தால் எப்படி வெளியே செல்வது? எங்களுக்கு தயவு செய்து பாதுகாப்பு வேண்டும் என்று மும்பை போலீசுக்கு கூறி இருந்தார்.

    சிபிஐ அதிகாரிகள்

    சிபிஐ அதிகாரிகள்

    இதையடுத்து மும்பை போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளிக்கத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் சொன்னதால்தான் ரியாவுக்கும் அவர் குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் எந்த நேரமும் அவர் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Sushant Singh Rajput case: Rhea Chakraborty to get Mumbai Police protection on CBI's request
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X