பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக்கல.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சுஷாந்த் சிங் காதலி!
மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் தான் கலந்து கொள்ளவில்லை என சுஷாந்த் சிங் காதலி அதிரடியாக அறிவித்துள்ளார்.
மறைந்த பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிகை அங்கிதா லோகாண்டே என்பவரை காதலித்து வந்தார்.
இருவரும் பிரேக்கப் செய்து கொண்ட பின்னர் மற்றொரு நடிகையான ரியா சக்கரவர்த்தியை காதலித்து வந்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

தூக்கிட்டுத் தற்கொலை
எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாகவே வாழ்ந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கடந்த ஓராண்டாக ஒரு பக்கம் விசாரணை நடைபெற்று வருகிறது.

காதல் மன்னன்
பெண்கள் பார்த்த மாத்திரத்திலேயே பின்னால் சுற்றத் தொடங்கும் அளவுக்கு பேரழகு கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பாலிவுட் நடிகைகள் மத்தியில் காதல் மன்னனாகவே வலம் வந்தார். நடிகை அங்கிதா லோகாண்டே, ரியா சக்கரவர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் சுஷாந்தை காதலித்துள்ளனர்.

காதலி கைது
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த போலீசார் அவரை விசாரித்து கைது செய்தனர். போதைப் பொருள் விவகாரத்திலும் சிக்கிய ரியா சக்கரவர்த்தி சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைந்து கிடந்தார்.

பிக் பாஸ் அழைப்பு
ஜாமினில் வெளிவந்த நடிகை ரியா சக்கரவர்த்தியை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சல்மான் கான் தொகுத்து வழங்க உள்ள 16வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரியா சக்கரவர்த்தி கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அங்கிதாவையும் விடல
ரியா சக்கரவர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா மாட்டாரா என்பது இன்னமும் தெளிவாகாத நிலையில், அடுத்ததாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியும் நடிகையுமான அங்கிதா லோகாண்டே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக கிசுகிசுக்கள் பாலிவுட்டில் பரவி வருகின்றன.

ப்ளீஸ் விட்ருங்க
சர்ச்சை நடிகைகளை பங்கேற்க வைத்து டிஆர்பியை எகிற விடுவதை தான் பிக் பாஸ் நிகழ்ச்சி காலம் காலமாக செய்து வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என்றும் தேவையில்லாமல் என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம், தயவு செஞ்சு விட்ருங்க என கேட்டுக் கொண்டுள்ளார் அங்கிதா லோகாண்டே.


Click it and Unblock the Notifications











