சுஷாந்த் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் ஜெயிலில் இருந்திருப்பார்.. சர்ச்சை ட்வீட் போட்ட டாப்சி!

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை டாப்சி பதிவிட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் விவகாரத்தில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு நடிகை கங்கனா ரனாவத் மீடியா வெளிச்சம் தேடிக் கொள்கிறார் என சாடிய நடிகை டாப்சி, தற்போது தொடர்ந்து நடிகை ரியாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

டாப்சியின் இந்த ட்வீட் சுஷாந்த் சிங் ராஜ்புத் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ள நிலையில், 18 ஆயிரம் கமெண்ட்டுகள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றன.

ரூட் மாறிய வழக்கு

ரூட் மாறிய வழக்கு

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தற்போது பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்காக மாறி உள்ளது. நடிகை ரியா சக்கரவர்த்தியின் தம்பி சோவிக் போதைப் பொருள் தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து நேற்று நடிகை ரியா சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டார்.

சர்ச்சை ட்வீட்

சர்ச்சை ட்வீட்

போதைப் பொருள் விவகாரத்தில் தனக்கும் தொடர்பு இருப்பதாக நடிகை ரியா சக்கரவர்த்தி ஒப்புக் கொண்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். ரியாவின் கைது பற்றிய சில பிரபலங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். நடிகை டாப்சி போட்ட ஒரு ட்வீட், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை குற்றவாளியாக சித்தரிப்பதால், பாலிவுட் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

சுஷாந்த் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார்

சுஷாந்த் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார்

நடிகை ரியா சக்கரவர்த்தி தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு தெரியாமல் போதைப் பொருளை மறைமுகமாக அவரது டீ மற்றும், ஜூஸ்களில் கலந்து கொடுத்தார் என்ற தகவல்கள் சமீபத்தில் கசிந்திருந்தன. ஆனால், அதனை மறுத்துள்ள நடிகை டாப்சி, இந்நேரம் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் ரியாவுக்கு பதில் சிறையில் இருந்திருப்பார் என ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவரை திட்டமிட்டே பாலிவுட் மாஃபியாக்கள் ரியாவை வைத்து கொன்று விட்டனர் என சுஷாந்த் ரசிகர்கள் கடந்த மூன்று மாதங்களாக போராடி வரும் நிலையில், நடிகை டாப்சி போட்ட இந்த ட்வீட்டை பார்த்த சுஷாந்த் ரசிகர்கள், அவரை கண்டபடி விளாசி வருகின்றனர்.

சுஷாந்த் உடன் பழகுவதற்கு முன்பே

சுஷாந்த் உடன் பழகுவதற்கு முன்பே

கடந்த 2017ம் ஆண்டில் இருந்தே நடிகை ரியா சக்கரவர்த்திக்கும் அவரது தம்பி சோவிக்குக்கும் போதைப் பொருள் விநியோகிப்பவர்களுடன் தொடர்பு உள்ளதாகவும், நடிகை ரியாவும், சுஷாந்த் சிங்கும் கடந்த 2019ல் தான் பழகத் தொடங்கினர். உண்மை என்னவென்றே தெரியாமல், நீங்கள் எப்படி சுஷாந்தை குற்றவாளி எனக் கூறலாம் என வரிந்து கட்டி டாப்சியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இனி நீயும் காலி

இனி நீயும் காலி

நடிகை ஆலியா பட்டின் சடக் 2 படத்தை புறக்கணித்தது போலவே இனிமேல் உன் படமும் ஓடாது என்றும், ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களும் நடிகை டாப்சியை புறக்கணிக்க வேண்டும் என்றும், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தை இழிவு படுத்தி ரியாவை காப்பாற்ற நீங்கள் போடும் திட்டம் அம்பலமாகி விட்டது என்றும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X