தற்கொலைக்கு முன் தனது பெயரை கூகுள் செய்து பார்த்த நடிகர் சுஷாந்த் சிங்.. தடயவியல் அறிக்கை தகவல்!
மும்பை: பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்வதற்கு முன் தனது பெயரை கூகுள் செய்து பார்த்திருக்கிறார் என்று தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14 ஆம் தேதி, தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இது பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர், இவர்.

அறக்கட்டளை
மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து பாந்த்ரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி, சுஷாந்தின் நண்பர்கள், இயக்குனர்கள், அவர் சிகிச்சை பெற்ற டாக்டர், சக நடிகர், நடிகைகள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

அறக்கட்டளை
மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் குடும்பத்தினர், அவர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்க இருப்பதாக, தெரிவித்திருந்தனர். அவர் நினைவை கவுரவிக்கும் விதமாக அவருக்குப் பிடித்த சினிமா, அறிவியல், விளையாட்டு துறைகளின் இளம் திறமையாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, சுஷாந்த் சிங் ராஜ்புத் அறக்கட்டளை தொடங்க இருக்கிறோம் என்று கூறியிருந்தனர்.

கூகுளில் தன்னைப் பற்றி
இதற்கிடையே, சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான தடயவியல் சோதனை அறிக்கை இப்போது வெளியாகி இருக்கிறது. அதில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், கடைசியாக தனது போனில் கூகுள் செய்திருக்கிறார். அதில் தனது பெயரை டைப் செய்து தேடியிருக்கிறார். கூடவே தன்னைப் பற்றி வந்த சில செய்தி கட்டுரைகளையும் அவர் வாசித்திருக்கிறார்.
Recommended Video

பெயரை கெடுக்க சதி
அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஜூன் 14 ஆம் தேதி, 10.15 மணிக்கு இதை செய்திருக்கிறார். நடிகர் சுஷாந்த் சிங், அடிக்கடி இப்படி கூகுள் செய்து தன்னைப் பற்றிய செய்திகளை படித்துவிட்டு தனது டீமோடு விவாதிப்பாராம். தனது பெயரை யாரோ சிலர் கெடுக்க நினைப்பதாகவும் அவர் கூறிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான தில் பச்சாரே ஓடிடியில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











