'சுஷாந்தின் கால்கள் வளைந்து இருந்தன, வாயில் நுரை இல்லை..' ஆம்புலன்ஸ் உதவியாளர் பரபரப்பு தகவல்!

By

மும்பை: சுஷாந்த் சிங்கின் கால்கள் வளைந்து இருந்தன என்றும் அவர் உடல் மஞ்சள் நிறமாக மாறி இருந்தது என்றும் ஆம்புலன்ஸ் உதவியாளர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

38 பேரிடம் விசாரணை

38 பேரிடம் விசாரணை

கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் சுஷாந்த் சிங். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார், சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரணை நடத்தினர். அவர் சுஷாந்த் சிங், மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் அதற்கான மருந்து மாத்திரைகளை பயன்படுத்தி வந்தார் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், மறைந்த சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னாவில், ரியா சக்கரவர்த்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் திடீரென புகார் கொடுத்தார்.

வங்கி கணக்குகள்

வங்கி கணக்குகள்

அதில் அவர், சுஷாந் சிங்கை, நடிகை ரியா மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்த்தின் வங்கி கணக்குகளை, ரியாதான் கையாண்டு வந்ததாகவும் கூறி இருந்தார். அவர் கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, ரூ.15 கோடி ரூபாய் வரை, ரியாவுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். சுஷாந்த், ரியா, அவர் சகோதரர் செளமிக் சக்கரவர்த்தி ஆகியோர் பார்ட்னராக இருந்து பிசினஸ் செய்து வந்துள்ளனர்.

வாக்குமூலம் பதிவு

வாக்குமூலம் பதிவு

இந்தப் பணபரிமாற்றம் தொடர்பாக, இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. அதன் விசாரணைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆஜரான ரியா, நேற்றும் தனது சகோதரருடன் சென்றார். அவரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் 'அரஸ்ட் ரியா' என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் நேற்று டிரெண்ட் ஆனது. சில மீடியா ரியாவை நேரடியாகவே இந்த வழக்கில் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆம்புலன்ஸ் உதவியாளர்

ஆம்புலன்ஸ் உதவியாளர்

இதற்கிடையே, சுஷாந்த் சிங்கின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் உதவியாளர், தனது பெயரைக் குறிப்பிடாமல் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். 'சுஷாந்த் சிங்கின் உடல் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. அவர் உடலில் சில அடையாளங்கள் இருந்தன. அவர் கால்கள் வளைந்து இருந்தன. அவர் வாயில் இருந்து நுரை வெளியில் வந்திருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்
மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

மேலும் தனது அனுபவத்தின் அடிப்படையில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில்தான் அவர் உடல் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, சுஷாந்த் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் ஆம்புலன்ஸ் உதவியாளரின் இந்தத் தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கை சுஷாந்த், மூச்சுத்திணறல் காரணமாகத்தான் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X