ஓடி ஒளிந்ததெல்லாம் ஓவர்.. அமலாக்கத் துறையில் முதன்முறையாக ஆஜரானார் நடிகை ரியா சக்கரவர்த்தி
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐக்கு மாறிய நிலையில், நடிகை ரியா சக்கரவர்த்தி தற்போது அமலாக்கத் துறையில் முதன்முறையாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
Recommended Video
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியான ரியா சக்கரவர்த்தி, சுஷாந்த் ராஜ்புத் கணக்கில் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சுஷாந்த்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் நடத்தப்படும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
சிபிஐ அதிகாரிகளும் நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

சுஷாந்த் சிங் காதலி
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி என வெளிப்படையாக அறிவித்துள்ளார் ரியா சக்கரவர்த்தி. மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சிபிஐ வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் முதன்முதலாக குரல் கொடுத்தவர் இவர் தான். ஆனால், பீகார் போலீசார் விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதும் இவர் தான்.

ரியா மீது மோசடி வழக்கு
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சுஷாந்த் சிங் ரசிகர்கள், பாலிவுட் பிரபலங்கள் கூறி வந்த நிலையில், நடிகை ரியா சக்கரவர்த்தியை விசாரிக்க வேண்டும் என்று சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் ரியா மீது வழக்கு தொடுத்தார்.

தலைமறைவு
பாட்னாவில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கொடுத்த வழக்கு காரணமாக 4 பேர் கொண்ட பாட்னா போலீஸ், மும்பை விரைந்தது. ஆனால், ஒரு வாரத்திற்கு மேலாகியும் அவர்களால் நடிகை ரியா சக்கரவர்த்தியை நெருங்க முடியவில்லை. மேலும், நடிகை ரியா தலைமறைவாகி விட்டார் என்றும், வெளிநாட்டிற்கு தப்பித்துச் சென்று விட்டதாகவும் தகவல்கள் பரவின.

ரியா வழக்கு தள்ளுபடி
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை தொடுத்த வழக்கின் பேரில், தன்னிடம் பாட்னா போலீஸ் விசாரிக்கக் கூடாது என்றும் அந்த வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரியும் நடிகை ரியா சக்கரவர்த்தி உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அதனை தள்ளுபடி செய்தனர். மேலும், மும்பை போலீசார் ரியாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தனர்.

அமலாக்கத்துறையிடம் ஆஜர்
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 15 கோடி ரூபாயை நடிகை ரியா தனது கணக்கு மாற்றி மோசடி செய்துள்ளதாக சுஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக இன்று தனது தம்பி செளவிக் சக்கரவர்த்தியுடன் நடிகை ரியா சக்கரவர்த்தி மாஸ்க் அணிந்த முகத்துடன் ஆஜர் ஆனார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும், சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளும் ரியாவை விசாரிக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











