மீண்டும் வா.. தோனியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து.. சுஷாந்த் சகோதரி ஷேர் செய்த உருக்கமான வீடியோ!
சென்னை: இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் மறைந்த நடிகர் சுஷாந்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி நேற்று முன்தினம் இரவு சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் நிச்சயம் இந்திய அணி உங்களை மிஸ் செய்யும் என கூறி வருகின்றனர்.

பழைய வீடியோ
இந்நிலையில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரியான ஷ்வேதா சிங் கீர்த்தி சுஷாந்துடன் தாங்கள் இருந்த பழைய வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் சுஷாந்த் சிங் மற்றும் அவரது சகோதரிகள் 4 பேரும் சுற்றி படுத்துள்ளனர். நடுவில் உள்ள சுஷாந்த் அவர்கள் ஐந்து பேரும் சிரித்து பேசி மகிழ்வதை வீடியோவாக எடுத்துள்ளார்.

சகோதரிகளுடன் நேரம்
இந்த வீடியோ 2016 ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி வெளியான பின்னர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், மறைந்த நடிகர் சுஷாந்த் தனது சகோதரிகளான நீது சிங், மீது சிங், பிரியங்கா சிங் மற்றும் ஸ்வேதா சிங் கீர்த்தி ஆகியோருடன் ஒரு சிறந்த நேரத்தை அனுபவிக்கிறார்.

மீண்டும் ஒன்றாக..
வீடியோவில் தங்கள் சகோதரரான சுஷாந்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாக அவரது சகோதரிகள் சொல்வது தெரிகிறது. இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஷ்வேதா சிங் கீர்த்தி, நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.. நாங்கள் வேடிக்கையாக இருந்தோம்! எங்களுக்கு வெயிலில் பருவங்கள் இருந்தன. ஆனால் புன்னகையும் பாடலும் பருவங்கள் போல போய்விட்டன.. நாங்கள் அனைவரும் மீண்டும் ஒன்றாக இருக்க விரும்புகிறேன்.. என உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.

உற்சாகமூட்டும் வகையில்
எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படம் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் திரைப்படம். கரக்பூர் ரயில் நிலையத்தில் ரயில் டிக்கெட் பரிசோதனையாளராக பணியாற்றிய ஒரு சிறிய நகர சிறுவன் முதல், கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டன் வரை, தோனியின் கதை மிகவும் உற்சாகமூட்டும் வகையில் இருந்தது.

காதலி மீது புகார்
இதில் தோனி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மும்பை போலீசார் அதனை தற்கொலை என அறிவித்த நிலையில் சுஷாந்தின் குடும்பத்தினர் அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி மீது புகார் அளித்தனர்.

ரசிகர்கள் வேண்டுகோள்
தற்போது சுஷாந்தின் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க ஆதரவு தெரிவித்தனர். சுஷாந்த் சிங்கின் ரசிகர்களும் அவரது மரணத்திற்கு நீதி கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











