»   »  நிர்வாணமா நடிக்கச் சொன்னா நடிக்க வேண்டியது தான், அதுக்கு தானே கொடுக்குறாங்க துட்டு: நடிகர்

நிர்வாணமா நடிக்கச் சொன்னா நடிக்க வேண்டியது தான், அதுக்கு தானே கொடுக்குறாங்க துட்டு: நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நிர்வாணமாக நடிக்கச் சொன்னால் நடிக்க வேண்டியது தான். அதற்கு தானே பணம் கொடுக்கிறார்கள் என்று பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தெரிவித்துள்ளார்.

டோணி வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். அவர் தற்போது சாரா அலி கானுடன் சேர்ந்து கேதர்நாத் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கரண் ஜோஹார் தயாரிக்கும் படம் ஒன்றில் ஜாக்குலின் பெர்ணான்டஸுடன் நடிக்கிறார்.

விறுவிறுப்பு

விறுவிறுப்பு

நானும், ஜாக்குலினும் நடிக்கும் புதிய படத்தில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும். அடுத்தது என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் பார்வையாளர்கள் படம் பார்ப்பார்கள்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

இந்த படம் ஹாலிவுட் படமான டிரைவின் ரீமேக் கிடையாது. இது எந்த படத்தின் ரீமேக்கும் இல்லை. இது ஹாலிவுட் ரீமேக்காக இருந்தால் என்னை ஏன் ஹீரோவாக போடப் போகிறார்கள். நல்ல அழகான ஹீரோவை நடிக்க வைத்திருப்பார்கள்.

தேவை

தேவை

கதைப்படி நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்றால் அப்படி நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதற்கு தான் சம்பளம் கொடுக்கிறார்கள்.

எமோஷன்

எமோஷன்

ஒரு காட்சியில் அழுக வேண்டுமானால் நான் நிஜமாகவே அழுகிறேன். எனக்கு நிஜத்தில் அவ்வளவாக உணர்ச்சிகள் இல்லை. அதனால் நான் அழுவது இல்லை என்றார் சுஷாந்த்.

English summary
Bollywood actor Sushant Singh Rajput said that if the story needs him to strip down he doesn't have any inhibitions to do so as he is getting paid for it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil