சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு.. மும்பை வந்தது சிபிஐ டீம்.. கைதாகிறாரா நடிகை ரியா சக்கரவர்த்தி?
மும்பை: சுஷாந்த் சிங் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் மும்பை வந்துள்ளனர்.
Recommended Video
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி மும்பையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்தனர்.

மன அழுத்தம்
கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர், நடிகர் சுஷாந்த் சிங். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மும்பை போலீசார், நடிகர் சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

ரியா சக்கரவர்த்தி
இந்நிலையில் , பீகாரில் வசித்து வரும் அவரது தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். அதில். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். நடிகை ரியா, சுஷாந்த்தை தற்கொலைக்குத் தூண்டியதாகவும் அவர் வங்கி கணக்குகளை கையாண்டு வந்த ரியா பண மோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.

சி.பி.ஐ. அதிகாரிகள்
இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில் சி.பி.ஐ. விசாரிக்க, உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் அனுமதி அளித்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று இரவு மும்பை வந்தனர். சிபிஐ எஸ்.பி, நுபுர் பிரசாத் தலைமையில் இந்த குழு வந்துள்ளது. இவர்கள் 10 நாட்கள் மும்பையில் முகாமிட்டு, இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்த உள்ள்னர்.

கைது செய்யப்படலாம்
மும்பை போலீசார் இதுவரை நடத்திய விசாரணை விவரங்களை கேட்டு பெறும் சிபிஐ அதிகாரிகள், சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், சினிமா இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் உள்பட பலரிடம் விசாரணை நடந்த உள்ளனர். குறிப்பாக நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரிக்க உள்ளனர். அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இதனால் சுஷாந்த் சிங் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











