twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதெல்லாம் பொய்யாமே.. சுஷாந்த் சிங் மரணம் எப்படி நடந்தது? எய்ம்ஸ் மருத்துவர்கள் சிபிஐ-யிடம் அறிக்கை!

    By
    |

    சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் மரணம் பற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள் சிபிஐ-க்கு அறிக்கை அளித்துள்ளனர்.

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதம் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

    அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மன அழுத்தம்

    மன அழுத்தம்

    கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர், நடிகர் சுஷாந்த் சிங். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மும்பை போலீசார், நடிகர் சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ரியா சக்கரவர்த்தி

    ரியா சக்கரவர்த்தி

    இந்நிலையில், பீகாரில் வசிக்கும் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங், பாட்னா போலீசில் புகார் அளித்தார். அதில். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். நடிகை ரியா, சுஷாந்த்தை தற்கொலைக்குத் தூண்டியதாகவும் பண மோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.

    சி.பி.ஐ. அதிகாரிகள்

    சி.பி.ஐ. அதிகாரிகள்

    இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில் சி.பி.ஐ. விசாரிக்க, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பை வந்தனர். மும்பையில் முகாமிட்டு, அவர்கள் ஒவ்வொருவரிடமாக விசாரணை நடத்தினர். சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி, நண்பர்கள், வீட்டு மானேஜர், ரியாவின் சகோதரர் உள்பட பலரிடம் இந்த விசாரணை நடந்தது.

    போதைப் பொருள்

    போதைப் பொருள்

    இதற்கிடையே, அமலாக்கத்துறை விசாரணையின் போது ரியாவுக்கு போதைப் பொருள் பழக்கம் இருப்பது தெரியவந்தது. அவரும் அவர் சகோதரரும் போதைப் பொருளை வாங்கிவந்து சுஷாந்துக்கு கொடுத்துள்ளனர். இதையடுத்து நடிகை ரியா, அவர் சகோதரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கால்கள் வளைந்து

    கால்கள் வளைந்து

    இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கால்கள் வளைந்து இருந்ததாகவும் போலீசார் இதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் குடும்ப வழக்கறிஞரும் இதைக் குறிப்பிட்டு இருந்தார்.

    கழுத்தை நெரித்து

    கழுத்தை நெரித்து

    அவர் ட்விட்டரில், சுஷாந்த் மரணத்தைத் தொடர்ந்து அவர் சடலத்தின் புகைப்படத்தை எய்ம்ஸ் மருத்துவர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன். அதை ஆய்வு செய்த அவர், 200 சதவீதம் சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறியதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

    தற்கொலைதான்

    தற்கொலைதான்

    இதற்கிடையே சுஷாந்த் சிங் பிரேத பரிசோதனை அறிக்கையை மறுமதிப்பீடு செய்த எய்ம்ஸ் மருத்துவ குழுவுக்கு தலைமை தாங்கிய, டாக்டர் சுதீர் குப்தா, இது தற்கொலைதான், கொலை அல்ல என்று கூறியுள்ளார். தங்களது அறிக்கையை அவர்கள் சிபிஐ அதிகாரிகளிடமும் அளித்துள்ளனர்.

    English summary
    AIIMS panel chief has said that, Sushant Singh Rajput’s death was a suicide, not murder'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X