மறைந்தும் சாதித்த சுஷாந்த்.. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரைலரையே வீழ்த்தி உலகளவில் சாதனை!

மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பெச்சாரா படத்தின் டிரைலர் உலகளவில் 24 மணி நேரத்தில் அதிக லைக்குகளை அள்ளிய அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரைலர் சாதனையை முறியடித்துள்ளது.

Recommended Video

Sushant பயன்படுத்திய துணியை Test செய்யும் நிபுணர்கள்

இந்தியளவில் ஷாருக்கானின் ஜீரோ படத்தின் டிரைலர் 2 மில்லியன் லைக்குளை அள்ளி படைத்த சாதனையை விஜய்யின் பிகில் படம் முறியடித்து இருந்தது.

இந்நிலையில், இந்தியா படங்களை மட்டும் அல்ல, ஹாலிவுட் படங்களின் அத்தனை சாதனைகளையும் சுஷாந்த் சிங் படம் கடந்திருக்கிறது.

ஹாலிவுட் ரீமேக்

ஹாலிவுட் ரீமேக்

கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான The Fault in Ours Stars படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் விரைவில் வெளியாக விருக்கும் Dil Bechara. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இருவர், எப்படி காதலால் இணைகிறார்கள் என்பதை சோகமும் சந்தோஷமும் கலந்து கலவையாக கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது.

டிரைலர் ரிலீஸ்

டிரைலர் ரிலீஸ்

வரும் ஜூலை 24ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் OTT ரிலீசாக வெளியாகவுள்ள இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஜூன் 14ம் சுஷாந்த் சிங் மரணமடைந்த நிலையில், ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களும், பல பிரபலங்களும் இந்த டிரைலரை வைரலாக ஷேர் செய்து சாதனைகளை படைக்க வைத்தனர்.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

இந்திய படங்களை மட்டுமின்றி உலகளவில் அதிக லைக்குகளை அள்ளிய அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரைலர் படைத்த 3..9 மில்லியன் லைக்ஸ் சாதனையை 24 மணி நேரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பெச்சாரா டிரைலர் முறியடித்து உள்ளது. தற்போது 5 மில்லியன் லைக்குகளை அள்ளியுள்ள இந்த டிரைலர் 24 மணி நேரத்தில் 4.4 மில்லியன் லைக்ஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

2 கோடி பேர்

2 கோடி பேர்

இயக்குநர் முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சைஃப் அலி கான், சஞ்சனா சங்கி நடிப்பில் உருவாகி உள்ள தில் பெச்சாரா படத்தின் டிரைலரை இதுவரை 2.2 கோடி பேர் பார்த்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில், காதல், சோகம், மகிழ்ச்சி என பல உணர்வுகளை கலந்து கட்டி கொடுத்திருக்கும் டிரைலர் வைரலாகி வருகிறது.

ஷேர் செய்த பிரபலங்கள்

ஷேர் செய்த பிரபலங்கள்

சுஷாந்த் சிங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவர் நடிப்பில் உருவாகி உள்ள கடைசி படமான தில் பெச்சாரா படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வைக்க ரசிகர்கள் மட்டுமின்றி பல பாலிவுட் பிரபலங்களும் முயற்சி செய்து வருகின்றனர். பிரியங்கா சோப்ரா, சாரா அலி கான், நீல் நிதின் முகேஷ், அனுஷ்கா ஷர்மா, ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் இந்த டிரைலரை ஷேர் செய்து இருந்தனர்.

சோகத்தில் ரசிகர்கள்

சோகத்தில் ரசிகர்கள்

சுஷாந்த் சிங் ராஜ்புத் இல்லாத இந்த நேரத்தில், அவரது வெற்றியை கண்டு ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும், அதனை காண அவர் இல்லையே என்றும், டிரைலரில் காட்சிக்கு காட்சி சிரித்த முகத்துடனும், துரு துருப்பான இளைஞராகவும் அவர் செய்யும் அட்டகாசங்களை பார்த்த ரசிகர்கள், இவரா தற்கொலை செய்து கொண்டார், நம்பமுடியவில்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X