மனச்சோர்வில் இருந்த சுஷாந்துக்கு ரியா கொடுத்த ட்ரீட்மென்ட் இதுதான்.. முன்னாள் சமையல்காரர் பகீர்!

சென்னை: மனச்சோர்வில் இருந்த சுஷாந்தை மீட்க ரியா சக்ரவர்த்தி என்ன செய்தார் என்பது குறித்து சுஷாந்தின் முன்னாள் சமையல்காரரான அஷோக் பகீர் தகவல்களை கூறியுள்ளார்.

சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது காதலியான ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் ரியா, சுஷாந்த் மரணத்தின் போது தான் அவரது வீட்டிலேயே இல்லை என்னை எப்படி கேள்வி கேட்க முடியும் என கூறி வருகிறார்.

மேலும் தான் சுஷாந்துடன் இல்லாத நேரத்தில் அவரது சகோதரியான மீதுதான் உடனிருந்தார். ஆகையால் அவர்தான் சுஷாந்த் மரணம் குறித்து பதிலளிக்க வேண்டும் என தெரிவித்து வருகிறார்.

 முன்னாள் சமையல்காரர்

முன்னாள் சமையல்காரர்

அதேநேரத்தில் நடிகை ரியா சக்ரவர்த்தி, தனது மேனேஜர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சுஷாந்துக்கு தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை கொடுத்தது வாட்ஸ்அப் சாட் மூலம் அம்பலமானது. இந்நிலையில் நடிகர் சுஷாந்தின் முன்னாள் சமையல்காரரான அஷோக், சுஷாந்த் மற்றும் ரியா குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

நான் இருந்திருந்தால்

நான் இருந்திருந்தால்

ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மூன்றரை ஆண்டுகள் பணியாற்றிய தன்னை ரியா சக்ரவர்த்திதான் வெளியே அனுப்பிவிட்டார். நான் இருந்திருந்தால் அவரை ஏதாவது வேலையில் ஈடுபடுத்தி ஆக்டிவாக வைத்திருந்திருப்பேன்.

மாத்திரைகளை கொடுத்து..

மாத்திரைகளை கொடுத்து..

அவரை ஃபிட்டாகவும் வைத்திருந்திருப்பேன், அவருடைய மனநிலையை கட்டுப்படுத்த அவரை உடற்பயிற்சி மேற்கொள்ள வைத்திருப்பேன். ஆனால் அவரை சுற்றி இருந்தவர்கள் அவருக்க அவை எதையுமே செய்யவில்லை. அவரை நோயாளி என்றுதான் அழைத்தார்கள். அவருக்கு வெறும் மாத்திரைகளை கொடுத்து எப்போதும் தூங்க வைத்து கொண்டே இருந்தார்கள்.

அப்படியேதான் ஆவார்

அப்படியேதான் ஆவார்

ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது அவருக்கு ஏதாவது வேலை கொடுத்தப்படியே இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவரை நோயாளி நோயாளி என்று சொன்னால் அவர் இன்னும் நோயாளியாகதான் ஆவார். ரியாவும் அவருடன் இருந்தவர்களும் அதையேதான் செய்தார்கள்.

தூங்க வைத்தார்கள்

தூங்க வைத்தார்கள்

சுஷாந்துக்கு மாத்திரைகளையும் மருந்துகளையும் மட்டும்தான் கொடுத்தார்கள். ஒன்று அவர் தூங்கிக்கொண்டிருப்பார், அல்லது படுத்தேக் கிடப்பார். அவரை எந்த வேலையையும் செய்ய விடவில்லை. அவர் செயலற்ற முறையில் இருக்கும்படிதான் வைத்திருந்தார்கள்.

ரியா நீக்கிவிட்டார்..

ரியா நீக்கிவிட்டார்..

நான் எனது சொந்த நாடான நேபாலுக்கு சென்றுவிட்டு அக்டோபரில் திரும்பினேன். ஆனால் என்னை வேலைக்கு மீண்டும் சேர்த்துக்கொள்ளவில்லை. நான் என்னை வேலையை விட்டு நீக்கியது யார் ராஜ்புத் சாரா என விசாரித்தேன், அதற்கு ரியாதான் என்னை நீக்கியதாக கூறினார்கள். அதன்பின் அவர்களிடம் நான் பேசவில்லை.

நான்தான் கவனித்தேன்

நான்தான் கவனித்தேன்

எதற்காக ரியா என்னை வேலையை விட்டு நீக்கினார் என்று எனக்கு தெரியவில்லை. அந்த வீட்டில் வேலை பார்த்தவர்களிலேயே நான்தான் ரொம்ப சீனியர். உள்ளே வருவது வெளியே போவது என எல்லாவற்றையும் நான்தான் கவனித்துக் கொண்டிருந்தேன். சுஷாந்தை பார்க்க அவரது சகோதரிகளுக்கு கூட அனுமதி கொடுக்கப்படவில்லை.

அவரை பார்க்க வந்தனர்

அவரை பார்க்க வந்தனர்

சுஷாந்துதான் அவரது வீட்டிற்கு கடைசிப்பிள்ளை. அவருக்கு நான்கு மூத்த சகோதரிகள் உள்ளனர். நீத்து, மீத்து, பிரியங்கா மற்றும் ஸ்வேதா. ஒரு முறை மீத்துவும் பிரியங்காவும் அவர்களுடைய சகோதரரை பார்க்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டனர். ஆனால் சுஷாந்த் பிஸியாக இருப்பதாக அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பதில் கிடைத்தது.

பார்க்க விடவில்லை

பார்க்க விடவில்லை

ஆனால் அவரது சகோதரிகள் வந்தபோது சுஷாந்த் வீட்டில் தூங்கிக் கொண்டுதான் இருந்தார். சுஷாந்தின் போனில் இருந்து ரியா சக்ரவர்த்திதான் அவர் பிஸியாக இருப்பதாக மெஸேஜ் அனுப்பி, அவருடைய சகோதரிகளை கூட பார்க்க விடாமல் செய்தார். இவ்வாறு முன்னாள் சமையல்காரரான அஷோக் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X