twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி அந்த மின்னும் கண்களை.. திறமையானவர்களை ஊக்குவிக்க அறக்கட்டளை.. சுஷாந்த் குடும்பம் டச்சிங் அறிக்கை

    By
    |

    மும்பை: திறமையானவர்களை ஊக்குவிக்க சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயரில் அறக்கட்டளை தொடங்க இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    Recommended Video

    Sushant ரசிகர்களிடம் சரணடையும் Salman Khan

    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த14 ஆம் தேதி, தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

    இது பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர், இவர்.

    ரசிகரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆடைப் பட நாயகி.. திடீரென தீயாய் பரவும் வீடியோ!ரசிகரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த ஆடைப் பட நாயகி.. திடீரென தீயாய் பரவும் வீடியோ!

    அறக்கட்டளை

    அறக்கட்டளை

    அவர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவருமே இரங்கல் தெரிவித்தனர். அவர் மறைந்து இத்தனை நாட்களுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர், அவர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்க இருப்பதாக, அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    சிங்கத்தை போல

    சிங்கத்தை போல

    அந்த அறிக்கையில் உருக்கமாக அவர்கள் கூறியிருப்பதாவது: சுஷாந்த், சுதந்திரமானவர், நம்பமுடியாத அறிவாளி. அவர் எதைபற்றியும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர். கட்டுப்பாடில்லாத கனவுகளைக் கண்டவர். ஒரு சிங்கத்தை போல, அந்த கனவுகளைத் துரத்தியவர். அவர் தாராளமாகச் சிரிக்கக் கூடியவர். அவர் எங்கள் குடும்பத்தின் பெருமை. உத்வேகம்.

    மின்னும் கண்கள்

    மின்னும் கண்கள்

    அவரது மதிப்புமிக்கப் பொருள், டெலஸ்கோப். அதன் மூலம் அவர் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருப்பார். அந்த எளிமையான சிரிப்பை, அந்த மின்னும் கண்களை, அறிவியல் பற்றிய அவரது முடிவில்லாத கோபங்களை இனி கேட்கப் போவதில்லை என்பதை எங்களால் ஏற்க முடியவில்லை. அவரது இழப்பு நிரந்தரமான, வெளிப்படையான வெற்றிடத்தை நிரப்பி இருக்கிறது.

    நினைவுச் சின்னம்

    நினைவுச் சின்னம்

    அவர் தனது ஒவ்வொரு ரசிகரையும் நேசித்தார். அவர் மீது பொழிந்த அன்புக்கு நன்றி. அவர் நினைவை கவுரவிக்கும் விதமாக அவருக்குப் பிடித்த சினிமா, அறிவியல், விளையாட்டு துறைகளின் இளம் திறமையாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் அறக்கட்டளை தொடங்க இருக்கிறோம். அவர் குழந்தை பருவத்தைக் கழித்த பாட்னா ராஜீவ் நகரில் உள்ள வீடு, நினைவுச் சின்னமாக மாற்றப்படும்.

    இன்ஸ்டாகிராம்

    இன்ஸ்டாகிராம்

    அதில், அவரது ஆயிரக்கணக்கான புத்தகங்கள், டெலஸ்கோப், பிளைட் சிமுலேட்டர் போன்றவற்றை ரசிகர்களுக்காக வைக்க இருக்கிறோம். இப்போதிருந்து அவர் பயன்படுத்திய இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களை அவரது நினைவாக பராமரிக்க விரும்புகிறோம். அவருக்கான பிரார்த்தனைக்கும் அன்புக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

    English summary
    Sushant Singh Rajput’s family releases statement, to set up foundation to support young talent
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X