twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பல பிரார்த்தனைகளுக்கு பிறகு பிறந்தான்.. என் மகன் ஒரு 'ஸ்பெஷல் சோல்'.. சுஷாந்தின் தந்தை உருக்கம்!

    |

    சென்னை: 34 வயதுக்குள் என் மகன் எவ்வளவோ சாதித்துவிட்டான் என நடிகர் சுஷாந்தின் தந்தை உருக்கமாக பேசியிருக்கிறார்.

    நடிகர் சுஷாந்த் கடந்த 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    34 வயதான சுஷாந்தின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுஷாந்த் சிங் மரணம்.. பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம்.. மனம் திறந்து பேசிய 'நட்டி’ நட்ராஜ்! சுஷாந்த் சிங் மரணம்.. பாலிவுட்டில் நிலவும் நெப்போடிசம்.. மனம் திறந்து பேசிய 'நட்டி’ நட்ராஜ்!

    தானே செதுக்கிய மனிதன்

    தானே செதுக்கிய மனிதன்

    இதனிடையே சுஷாந்த் குறித்து பலரும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சுஷாந்தின் தந்தை கேகே சிங், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் தனது மகனை தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட ஒரு மனிதன் என கண்ணீருடன் புகழ்ந்து இருக்கிறார்.

    சொல்லாமலே வந்தார்

    சொல்லாமலே வந்தார்

    மேலும் சுஷாந்துக்கு எப்படி தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் ஆர்வம் வந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த கேகே சிங், சினிமா மீது சுஷாந்துக்கு அதிக ஆர்வம். என்னிடம் சொல்லாமலே மும்பைக்கு புறப்பட்டு விட்டார். பின்னர் அவரது அக்காவா நீத்துக்கு போன் செய்த அவர், என் கனவுகளை தேடி மும்பை வந்ததாக கூறினார்.

    செல்ஃப் மேட் மேன்

    செல்ஃப் மேட் மேன்

    நான் அவரது படிப்பை முடித்துவிட்டு போ என்று சொல்வேன் என்பதற்காக என்னிடம் சொல்லிவிட்டு செல்ல அவர் பயந்தார். மும்பைக்கு வந்த உடனேயே அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய மகன் ஒரு செல்ஃப் மேட் மேன்.

    கடைசியில் என்ன நடந்தது

    கடைசியில் என்ன நடந்தது

    எனக்கு எல்லாமே மெரிட்டில் கிடைத்து விடும் என்றான், ஆனால் கடைசியில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. என் மகள்கள் என் மகனுடன் பேசுவார்கள். அவருக்கு சினிமாவில் எவ்வளவு ஆர்வம் இருந்தது, சினிமாவில் அவரது கனவு என்ன என்று சொல்வார்கள். அவருடைய கனவுப்படி அவர் வாழட்டும் என்று என்னிடம் கூறினார்கள்.

    அக்காவிடம் பேசுவார்

    அக்காவிடம் பேசுவார்

    சுஷாந்த் ரொம்பவே நேர்மையானவர் ஆனார் கடுமையானவர் அல்ல. நான் எப்போதெல்லாம் அனுமதி கொடுக்கமாட்டேன் என பயப்படுகிறாரோ அப்போதெல்லாம் அவர் தன்னுடைய அக்காவிடம்தான் பேசுவார். சுஷாந்துக்கு ஒருபோதும் அழுத்தம் கொடுக்கவில்லை அல்லது அவரது சுதந்திரத்தை எந்த வகையிலும் குறைக்கவில்லை என்றும் கூறினார்.

    ஸ்பெஷல் சோல்

    ஸ்பெஷல் சோல்

    மும்பை மற்றும் சினிமாவிலிருந்து விலகி ஒரு எளிய வாழ்க்கையை வாழ அவரே விரும்பினார். பவித்ரா ரிஷ்டா கிடைத்த பிறகு சுஷாந்த் வீட்டிற்கு வந்தார். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அவர் ஒரு ஸ்பெஷல் சோல், பல பிரார்த்தனைகளுக்குப் பிறகு அவர் பிறந்தார்.

    அப்பா உருக்கம்

    அப்பா உருக்கம்

    அவர் ஒரு சில ஆண்டுகளில் இவ்வளவு சாதித்தார், அவர் ஒரு சிறப்பான ஆன்மா. மக்கள் வாழ்நாளில் இவ்வளவு சாதிக்க முடியாது.. இவ்வாறு சுஷாந்தின் அப்பாவான கேகே சிங் உருக்கமாக பேசியிருக்கிறார். சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    Recommended Video

    Sushant Singh இறந்த பின் கிடைக்கும் அங்கிகாரம் | Remembering
    உள்ளுறுப்பு அறிக்கை

    உள்ளுறுப்பு அறிக்கை

    அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கில் தொங்கியதால் ஏற்பட்ட மூச்சு திணறலால் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளார். ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழுவினர் இந்த அறிக்கையை ஆய்வு செய்தனர். தற்போது போலீசார் உள்ளுறுப்பு அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். இதுவரை 23 பேரின் அறிக்கைகள் மும்பை போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Sushant Singh Rajput's father KK Singh talks about his son after 10 days of his death. He says his son is a Special soul.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X