என்ன லிஸ்ட் பெருசா போகுது.. சுஷாந்த் சிங்கும் சாராவும் அப்படி காதலிச்சாங்க.. போட்டுடைத்த நண்பன்!

மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும், நடிகை சாரா அலி கானும் காதலித்ததாக புது ஸ்டோரி ஒன்றை சுஷாந்தின் நண்பர் கூறியுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான சிபிஐ விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில், இந்த புதிய தகவல், மேலும், பல பிரபலங்களுக்கு பிரச்சனையை உண்டு பண்ணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலிகள் என அங்கிதா லோகாண்டே மற்றும் ரியா சக்கரவர்த்தி பெயர்கள் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முதல் படம்

முதல் படம்

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் நாயகியாக அறிமுகமானதே, சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் தான். இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான அந்த படம் சர்ச்சைகளுக்கு நடுவே கலவையான விமர்சனங்களுடன் ஓடியது.

சுஷாந்த் சிங் அப்செட்

சுஷாந்த் சிங் அப்செட்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து மீடியாக்களிடம் பேசிய அந்த படத்தின் இயக்குநர் அபிஷேக் கபூர், சுஷாந்த் சிங் அந்த படத்தால் ரொம்ப அப்செட் ஆனதாகவும், சாரா அலி கான் ஒட்டுமொத்த ஸ்பாட் லைட்டையும் தன் வசம் ஈர்த்துக் கொண்டார் என கவலைப் பட்டதாகவும், ஏகப்பட்ட சிம் கார்டுகளை மாற்றியதாகவும் கூறி இருந்தார்.

நண்பன் சொன்ன ரகசியம்

நண்பன் சொன்ன ரகசியம்

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை விசாரிக்க சிபிஐ தொடங்கி இருக்கும் நிலையில், சுஷாந்த் சிங்கின் நண்பர் சாமுவேல் ஹோகிப், சுஷாந்த் சிங்கும் சாரா அலி கானும் கேதார்நாத் படப்பிடிப்பின் போது, ஒருத்தரை ஒருத்தர் காதலித்து வந்தனர் என்கிற புதுக் கதையை போட்டுடைத்து பாலிவுட்டில் மற்றொரு பிரளயத்தை உருவாக்கி உள்ளார்.

பிரிந்து விட்டனர்

பிரிந்து விட்டனர்

ஆனால், கேதார்நாத் படத்திற்கு பிறகு சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான சோன்சிரியா படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததை தொடர்ந்து, திடீரென சுஷாந்த் சிங் ராஜ்புத்தை சாரா அலி கான் பிரேக்கப் செய்துவிட்டார் என்றும் சாமுவேல் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை

சுஷாந்த் சிங் ராஜ்புத்தை சுற்றி ஏகப்பட்ட பெண்களின் பெயர்களே சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அவரது முன்னாள் காதலி அங்கிதா லோகாண்டே, சுஷாந்த் சிங்கின் மற்றொரு காதலி ரியா சக்கரவர்த்தி அவரிடம் பண மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், தற்போது இளம் நாயகி சாரா அலி கான் பெயரும் அடிபட்டு வருவது ரசிகர்களுக்கு மேலும், குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது.

டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நண்பரின் ஸ்டேட்மென்ட்டை தொடர்ந்து, #SaraAliKhan என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். சாரா அலி கான் அடுத்ததாக தனுஷின் அட்ரங்கி ரே படத்தில் நடிக்க உள்ளார். அவர் நடிப்பில் உருவாகி உள்ள கூலி நம்பர் ஒன் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. சமீபத்தில், வெளியான தில் பெச்சாரா படத்தில், சாரா அலி கானின் தந்தை சைஃப் அலி கான் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு, சாரா அலி கான் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ளவும் பலர் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X