'குட்பை மும்பை..' சினிமாவை விட்டு வெளியேறுகிறாரா..? நடிகர் சுஷாந்த் சிங் ஹீரோயின் புதிர் போஸ்ட்!

By

மும்பை: சுஷாந்த் சிங்கின் கடைசி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகையின் புதிர் போஸ்ட், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

இது இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

விசாரணை

விசாரணை

மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவருமே இரங்கல் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து பாந்த்ரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி, சுஷாந்தின் நண்பர்கள், அவர் சிகிச்சை பெற்ற டாக்டர், சக நடிகர், நடிகைகள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

அறக்கட்டளை

அறக்கட்டளை

மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் சுஷாந்த் சிங் குடும்பத்தினர், அவர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்க இருப்பதாக, அறிக்கையில் தெரிவித்திருந்தனர். அவர் நினைவை கவுரவிக்கும் விதமாக அவருக்குப் பிடித்த சினிமா, அறிவியல், விளையாட்டு துறைகளின் இளம் திறமையாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக சுஷாந்த் சிங் ராஜ்புத் அறக்கட்டளை தொடங்க இருக்கிறோம்' என்று கூறியிருந்தனர்.

நடிகை சஞ்சனா சங்கி

நடிகை சஞ்சனா சங்கி

சுஷாந்த் சிங் நடித்துள்ள கடைசி படம், 'தில் பச்சாரே' ஒடிடியில் வெளியாக இருக்கிறது. இதை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. முகேஷ் சப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இதில் சுஷாந்த் சிங் ஜோடியாக நடித்திருப்பவர் சஞ்சனா சங்கி. இவர் டெல்லியை சேர்ந்தவர். கொரோனா லாக்டவுன் காரணமாக டெல்லியில் இருந்த அவர் சமீபத்தில் மும்பை வந்தார்.

திரும்பவே மாட்டேன்

திரும்பவே மாட்டேன்

சுஷாந்த் சிங் மறைவை அடுத்து உடைந்து போயிருந்த அவர், பாந்த்ரா போலீஸ் ஸ்டேஷனில் சுஷாந்த் சிங் பற்றி தனக்குத் தெரிந்த தகவல்களை கடந்த செவ்வாய்க்கிழமை வாக்குமூலமாக அளித்தார். பின்னர் நேற்று டெல்லி திரும்பினார். இதையடுத்து தனது சமூக வலைத்தளத்தில், இனி மும்பை திரும்பவே மாட்டேன் என்பது போல, புதிரான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

Recommended Video

Sushant Singh இறந்த பின் கிடைக்கும் அங்கிகாரம் | Remembering
மீண்டும் சந்திப்போம்?

மீண்டும் சந்திப்போம்?

குட்பை மும்பை. நான்கு மாதங்களுக்குப் பிறகு மும்பை வந்தேன். இப்போது டெல்லி திரும்புகிறேன். உங்கள் (மும்பை) சாலைகள் வித்தியாசமாக இருந்தன. அவை வாகனங்கள் இன்றி வெறிச்சோடி இருந்தன. ஒருவேளை என் மனதில் இருக்கும் வேதனை, எனது பார்வையை மாற்றி இருக்கலாம். அல்லது நீங்களும் வேதனைகளில் இருக்கலாம். மீண்டும் சந்திப்போம்? விரைவில். அல்லது சந்திக்காமலும் இருக்கலாம்' என்று கூறியுள்ளார். அவர் இப்படி புதிராக பதிவிட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பாகி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X