ஹாட் ஸ்டார்லயே ஃபிரீதானே.. வேலையை காட்டிய தமிழ்ராக்கர்ஸ்.. லீக்கான சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா!

By

சென்னை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பெச்சாரா, தமிழ் ராக்கர்ஸில் லீக் ஆகியுள்ளது.

Recommended Video

Jaanu Secrets Revealed | Samantha Prabhas | 96 Remake | Simbran Video Song

சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி, சைஃப் அலி கான் உள்பட பலர் நடித்துள்ள படம், தில் பெச்சாரா.

முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

கடும் அதிர்ச்சி

கடும் அதிர்ச்சி

கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.
மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கங்கனா ரனவத்

கங்கனா ரனவத்

சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்பதை அவரது ரசிகர்களால் இன்னும் ஏற்று கொள்ள முடியவில்லை. சுஷாந்த் சிங் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கங்கனா ரனவத் உள்ளிட்ட சில பாலிவுட் பிரபலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர் மறைவுக்குப் பிறகு நெப்போடிசம் குறித்து காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன.

தில் பெச்சாரா

தில் பெச்சாரா

இந்நிலையில் அவர் கடைசியாக நடித்துள்ள, தில் பெச்சாரா படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியானது. ஹாலிவுட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான The Fault in Our Stars என்ற படத்தின் ரீமேக் தான் இந்த படம். இரு கேன்சர் நோயாளிகள் எப்படி காதலித்து தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள் என்பது தான் கதை. இந்தப் படத்தை சுஷாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து ரசிகர்களும் பார்ப்பதற்காக இலவசமாக வெளியிட்டுள்ளது டிஸ்னி.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் உலகளவில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படங்களின் சாதனைகளை முறியடித்து 80 மில்லியன் பார்வைகளையும், 10 மில்லியன் லைக்குகளையும் பெற்று ரெக்கார்டு பிரேக்கிங் செய்திருந்தது. இந்நிலையில் வழக்கமாக படங்களை திருட்டுத்தனமாக ஆன்லைனில் லீக் செய்யும், தமிழ்ராக்கர்ஸ் இந்தப் படத்தையும் விட்டு வைக்கவில்லை.

ஹெச்.டி தரத்தில்

ஹெச்.டி தரத்தில்

இந்தப் படம் நேற்று வெளியான சில மணி நேரங்களிலேயே, ஆன்லைனில் லீக் செய்துள்ளனர். ஹெச்.டி தரத்தில் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே டிஸ்னி ஹாட் ஸ்டார் இலவசமாக வெளியிட்டுள்ள நிலையில் தமிழ்ராக்கர்ஸ் ஏன் திருட்டுத்தனமாக இதை வெளியிட வேண்டும்? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X