சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படம்.. தில் பெச்சாரா.. கதற வைக்கும் ட்ரெயிலர் வெளியானது!

சென்னை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பெச்சாரா படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

அவரது மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மும்பை போலீசார், சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபலங்கள் காரணம்

பிரபலங்கள் காரணம்

அதன்படி சுஷாந்தின் பெற்றோர், சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி, நண்பர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அளிக்கும் தகவல்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பாலிவுட்டின் முன்னணி பிரபலங்கள் பலரும் காரணம் என கூறப்படுகிறது.

தில் பெச்சாரா

தில் பெச்சாரா

பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், கரன் ஜோகர் உள்ளிட்ட 8 பேர் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் அவர் நடித்த கடைசிப் படமான தில் பெச்சாரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.

தில் பெச்சாரா

தில் பெச்சாரா

பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், கரன் ஜோகர் உள்ளிட்ட 8 பேர் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் அவர் நடித்த கடைசிப் படமான தில் பெச்சாரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.

புற்றுநோயை எதிர்த்து போராடும்

புற்றுநோயை எதிர்த்து போராடும்

இதில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சஞ்ஜனா சங்கி லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் சஞ்ஜனா சங்கி பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் இரண்டு இளசுகள் காதல் மற்றும் மகிழ்ச்சி தேடும் கதையை மையப்படுத்தி உள்ளது தில் பெச்சாரா.

மீண்டும் திரையில் சுஷாந்த்

மீண்டும் திரையில் சுஷாந்த்

தில் பெச்சாரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸால் மீண்டும் ஒரு முறை திரைக்கு வந்துள்ளார் மறைந்த நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத். இசை மற்றும் திரைப்படங்கள் மீது இருவருக்கும் உள்ள ஆர்வம் அவர்களுக்குள் பிணைப்பை ஏற்படுத்துகிறது. சுஷாந்த் புற்றுநோய் நிவாரணத்தில் இருக்கும்போது, சஞ்சனா, அவரை காயப்படுத்தாமல் இருக்க தன்னை அவரிடமிருந்து விலகியிருக்க முயற்சி செய்கிறார்.

ஜூலை 24 ஆம் தேதி ரிலீஸ்

ஜூலை 24 ஆம் தேதி ரிலீஸ்

பின்னர் அவர்கள் இருவரும் பாரிஸுக்கு ஒரு பயணம் செய்கிறார்கள். இந்த பயணம் அவர்களின் பிணைப்பை மேலும் அதிகமாக்குகிறது. தில் பெச்சாரா ஜூலை 24 ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. ஜூன் 14 அன்று இறந்த சுஷாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஸ்ட்ரீமிங் தளம் இந்த படத்தை இலவசமாக கிடைக்கச் செய்துள்ளது.

குறும்புத்தனமான இளைஞர்

குறும்புத்தனமான இளைஞர்

எம்.எஸ். தோனி வாழ்க்கை வரலாற்று படம் சிச்சோர் உள்ளிட்ட பல மறக்க முடியாத படங்களை கொடுத்த நடிகரின் கடைசி படம் இது. படத்தின் ட்ரெயிலரை பார்க்கும் போதே சுஷாந்த் சிங் ராஜ்புத், ஒரு சுறுசுறுப்பான குறும்புத்தனமான இளைஞராக நடித்து கலங்க வைத்துள்ளார் என தெரிகிறது.

கலங்கிய இயக்குநர்

கலங்கிய இயக்குநர்

சுஷாந்த் குறித்து நினைவு கூர்ந்துள்ள தில் பெச்சாரா படத்தின் இயக்குநர் முகேஷ் சப்ரா, இந்தப் படம் குறித்து சுஷாந்த்தை அப்ரோச் செய்த போது கதையை கூட கேட்காமல் சுஷாந்த் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறி கலங்கியிருக்கிறார்.

ட்ரெண்டிங்

இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தில் பெச்சாரா படத்தின் ட்ரெயிலர் ரிலீஸான சில நிமிடங்களிலேயே 5 லட்சம் பேர் அதனை பார்த்து ரசித்துள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். டிவிட்டரிலும் #DilBecharaTrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X