சாக விரும்பவில்லை.. கழுத்தில் தூக்கு கயிறுடன் நீதி கேட்கும் சுஷாந்த்.. நெஞ்சைப் பிழியும் ஓவியம்!

சென்னை: மறைந்த நடிகர் சுஷாந்த் குறித்து அவரது ரசிகர்கள் வரைந்துள்ள ஓவியம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

Sushant Singh இறப்பில் தொடரும் மர்மம்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சீரியல்களிலும் நடித்தார். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற சுஷாந்த், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உச்சம் தொட்டார். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

திட்டமிட்ட கொலை

திட்டமிட்ட கொலை

ஏராளமான இளம் ரசிகர்களை கொண்டுள்ள சுஷாந்த் கடந்த 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவரது மரணம் தற்கொலை அல்ல, அது ஒரு கொலை, திட்டமிட்ட கொலை என ரசிகர்களும் அரசியல் பிரமுகர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சுஷாந்தை அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, கொன்றவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேணடும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உலுக்கும் ஓவியங்கள்

உலுக்கும் ஓவியங்கள்

நடிகர் சுஷாந்த் மரணமடைந்து 15 நாட்கள் ஆகவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் பல வழிகளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சில ரசிகர்கள் சுஷாந்த் குறித்து நெஞ்சை உலுக்கும் வகையிலான ஓவியங்களை வரைந்து சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துவருகின்றனர்.

எனக்கு நீதி வேண்டும்

எனக்கு நீதி வேண்டும்

அந்த வகையில் ரசிகர் ஒருவர், நடிகர் சுஷாந்தின் கழுத்தில் தூக்கு கயிறின் தடத்துடன் கையில் எனக்கு நீதி வேண்டும், நான் சாக விரும்பவில்லை என எழுதப்பட்ட போஸ்டரை கையில் வைத்திருப்பது போன்ற ஓவியத்தை ஷேர் செய்துள்ளார். இந்த ஓவியம் வைரலாகி வருகிறது.

கண்ணீருடன் சுஷாந்த்

கண்ணீருடன் சுஷாந்த்

இதனை பார்த்த நெட்டிசன்கள் சுஷாந்த் குறித்து உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு ரசிகர் சுஷாந்த் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதி, அந்த வார்த்தைகளை கோர்த்தப்படியே அவரது ஓவியத்தை வரைந்துள்ளார். அதில் சுஷாந்த் கண்ணீர் விட்டு அழுவதாக உள்ளது அந்த ஓவியம். இந்த ஓவியமும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ட்ரேட் மார்க் சிரிப்பு

ட்ரேட் மார்க் சிரிப்பு

மற்றொரு ரசிகர், சுஷாந்த் சொர்க்கத்தில் இருக்கும் தனது தாயை சந்தித்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்குவதாகவும் உள்ளது. மேலும் தனது தாயின் மடியில் படுத்து சுஷாந்த் உறங்குவது போன்ற ஓவியமும் வைரலாகி வருகிறது. மேலும் சுஷாந்தின் ட்ரேட் மார்க் சிரிப்புடன் வரையப்பட்டுள்ள 3டி பெயிண்ட்டிங்கும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ஓவியம்

ஓவியம்

மேலும் சுவரில் மாட்டப்பட்டுள்ள சுஷாந்தின் வரையப்பட்ட படத்தில் இருந்து அவரது விரல்களை நீட்டுவது போன்றும், அவரது விரல்களை அவரது செல்ல நாயான ஃபட்ஜ் தொடுவது போன்ற ஓவியமும் காண்போரை கலங்க செய்வதாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X