நடிகர் மரணத்தால் தவிக்கும் செல்ல நாய் ஃபட்ஜ்.. உண்ணாமல் உறங்காமல் ஏக்கதுடன்.. கலங்க வைக்கும் போட்டோ!
சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆசையாக வளர்த்த அவரது நாய் உண்ணாமல் உறங்காமல் சோகம் தொய்ந்த முகத்துடன் இருக்கும் போட்டோக்கள் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது.
Recommended Video
பாலிவுட் சினிமாவின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14 ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலை அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமாத்துறையையும் உலுக்கி இருக்கிறது அவரது சுஷாந்தின் மரணம்.

போலீஸில் புகார்
பாலிவுட்டில் உள்ள சில சினிமா பெரும் தலைகளால் தான் ஓரங்கட்டப்பட்டதால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி சுஷாந்த் சிங் தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கு காரணம் என முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணியும் மரணம்
இதேபோல் அவரது மரணம் தொடர்பாக அவரது காதலியான ரியா சக்கரபர்த்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் மரணமடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது அண்ணி அடுத்த நாளே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சுஷாந்தின் உடல்
அவரை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரசிகர் ஒருவரும் சுஷாந்தின் மரணத்தை ஏற்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு திங்கள் கிழமை மும்பையில் தகனம் செய்யப்பட்டது.

சுஷாந்தின் செல்ல நாய்
அதனை தொடர்ந்து கங்கை நதியில் அவரது அஸ்தி நேற்றுதான் கரைக்கப்பட்டது. இந்நிலையில் சுஷாந்த் ஆசையாக வளர்த்த அவரது நாய் ஃபட்ஜியின் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சுஷாந்தின் செல்ல நாய் ஃபட்ஜும் அவரது மறைவால் நொறுங்கி போயுள்ளது.

வெறித்து பார்த்து
உடைந்து போயிருக்கும் ஃபட்ஜின் போட்டோவை ஒரு ட்விட்டர் பயனர் ஷேர் செய்துள்ளார். மேலும் ஃபட்ஜ் சுஷாந்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டோக்களில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் செல்ல நாய் ஃபட்ஜ் ஒரு படத்தில் அவரது போட்டோவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கொஞ்சும் ஃபட்ஜ்
மற்றொரு போட்டோவில் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிருடன் இருந்தபோது ஃபட்ஜுடன் விளையாடுவதாக உள்ளது. அதில் சுஷாந்த் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு தயாராகியிருக்கிறார். கோட் சூட் அணிந்துள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மீது தனது கால்களை வைத்து கொஞ்சுகிறது ஃபட்ஜ்.

கண்கள் குளம் ஆகிறது
மற்றொரு போட்டோவில் சோகத்துடன் தரையில் எதையோ வெறித்துப் பார்த்தப்படி படுத்துக்கிடக்கிறது ஃபட்ஜ். இந்த போட்டோக்களை பார்க்கும் போதே கண்கள் குளம் ஆகிறது. ஏற்கனவே சுஷாந்த் சிங் தனது செல்ல நாயான ஃபட்ஜுடன் இருக்கும் வீடியோ ஒன்று வைரலானது.

ஓடிப்பிடித்து விளையாடி
அதில் சுஷாந்த் அழைத்ததும் ஜம்மென்று அவர் மடியில் ஏறி படுத்துக்கொண்டு முகத்தை முகர்ந்து பார்த்து கொஞ்சியது ஃபட்ஜ். ஃபட்ஜின் முதுகை தடவி விட்ட சுஷாந்த் அதற்கு முத்தம் கொடுத்தார். மேலும் சுஷாந்தும் ஃபட்ஜும் ஓடிப்பிடித்து விளையாடிய வீடியோக்களும் வைரலானது.

நேரத்தை கழிக்க தவறியதில்லை
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனிமையில் இருந்த போது பெரும்பாலான நேரம் ஃபட்ஜ்தான் அவருக்கு கம்பெனி கொடுத்தது. மேலும் படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு வரும் நடிகர் சுஷாந்த், ஃபட்ஜுடன் நேரத்தை கழிக்க தவறியதில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

சுஷாந்தின் நினைவுகள்
இந்நிலையில் தனது எஜமானர் இல்லாமல் ஃபட்ஜ் தனிமையில் தவித்து வருகிறது. ஃபட்ஜ் சோகத்தில் மூழ்கியிருக்கும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், நடிகர் சுஷாந்தின் நினைவுகளை உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











