சுஷாந்த் சிங் மரணத்திற்கு நீதி வேண்டும்.. பிரதமரிடம் உருக்கமான கோரிக்கை வைத்த சகோதரி!

சென்னை: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு பாலிவுட் திரையுலகையே புரட்டி போட்டுள்ளது.

Recommended Video

Sushant காதலி கண்கலங்கி நீதி கேட்டுள்ளார் • Rhea Chakraborty

நெப்போடிசம் பிரச்சனை, காதலி ரியா சக்கரவர்த்தி பிரச்சனை என பல குழப்பங்கள் மர்மமாகவே உள்ளன.

ரியா சக்கரவர்த்தி வெளியிட்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில், சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார்.

பிரதமரிடம் கோரிக்கை

பிரதமரிடம் கோரிக்கை

அதில், தாங்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், மிகப்பெரிய பாலிவுட் காட் ஃபாதர் எல்லாம் தனக்கோ மறைந்த தன் சகோதரர் சுஷாந்த் சிங்குக்கோ இல்லை என்றும், சகோதரரின் மறைவு பல கேள்விகளையும், குழப்பங்களையும் எழுப்பி உள்ள நிலையில், உரிய விசாரணை நடத்தி, நீதி வழங்க பிரதமர் மோடி வழிவகை செய்ய வேண்டும் என சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மாதம்

கை போ சே எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமான நடிகர் சுஷாந்த் சிங், எம்.எஸ்.தோனி பயோபிக் படம், சிக்கோரே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கடந்த மாதம் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

மேலும், அவரது தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணம் என்றும் கூறினர். ஆனால், மும்பை போலீசாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் சுஷாந்த் சிங் ரசிகர்கள், மற்றும் சில பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மோசடி

மோசடி

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கணக்கில் இருந்த பல கோடி ரூபாய் பணத்தை அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மோசடி செய்து எடுத்து விட்டதாகவும், சுஷாந்த் சிங் மரணத்திற்கு முக்கிய காரணம் அவர் தான் என்றும், சுஷாந்த் சிங் தந்தை அண்மையில் பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்தது பரபரப்பை கிளப்பியது. பல மர்ம முடிச்சுகளை கடந்து போகும் சுஷாந்த் சிங்கின் இந்த மர்ம மரணத்திற்கு சரியான விடை கிடைக்குமா? என்று ஒட்டுமொத்த இந்தியாவே காத்துக் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X