மாயமான சுஷாந்தின் டிவிட்டுகள்.. டிவிட்டரின் உதவியை நாடிய மும்பை போலீஸ்.. சூடுபிடிக்கும் விசாரணை!

சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் டிவிட்டுகள் மாயமானது குறித்து மும்பை போலீஸ் டிவிட்டர் உதவியை நாடி வருகிறது.

நடிகர் சுஷாந்த் கடந்த 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்த் மரணம் அடைந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் அதிலிருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

23 பேரிடம் விசாரணை

23 பேரிடம் விசாரணை

சுஷாந்த் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை சுஷாந்துக்கு நெருக்கமானவர்கள், குடும்பத்தினர், காதலி என 23 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் அளித்த தகவல்கள், ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது.

டிவிட்டுகள் மாயம்

டிவிட்டுகள் மாயம்

சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி மற்றும் சுஷாந்தின் மனநல மருத்துவர் என பலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகர் சுஷாந்தின் சில டிவிட்டர் பதிவுகள் மாயமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

டிவிட்டருக்கு கடிதம்

டிவிட்டருக்கு கடிதம்

சுஷாந்தின் டிவிட்டர் பக்கத்தில் கடைசியாக அவர் டிசம்பர் 27ஆம் பதிவிட்ட டிவிட்டு மட்டுமே உள்ளது. இதுகுறித்து சந்தேகித்துள்ள மும்பை போலீசார், மறைந்த நடிகர் சுஷாந்த்தின் அக்கவுண்ட்டில் பதியப்பட்ட டிவிட்டுகள் குறித்து தகவல் அளிக்குமாறு டிவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

டிவிட்டுகள் டெலிட்

டிவிட்டுகள் டெலிட்

சுஷாந்தின் சில டிவிட்டுகள் வைரல் ஆன நிலையில் அந்த டிவிட்டுகள் கூட அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்டுள்ளன. சுஷாந்த் உயிருடன் இருக்கும் போதே அவரது சில டிவிட்டுகள் டெலிட் செய்யப்பட்டிருந்தது.

வைரலான டிவிட்டுகள்

வைரலான டிவிட்டுகள்

யார் கொடுத்த அழுத்தத்தின் பேரில் அவரது டிவிட்டுகள் டெலி செய்யப்பட்டன. மேலும் சுஷாந்த் மரணமடைந்த பிறகும் டிசம்பர் 27 ஆம் தேதிக்கு பிறகு அவர் பதிவு செய்த சில டிவிட்டுகள் வைரலான நிலையில் அந்த டிவிட்டுகளும் அவரது கணக்கில் இருந்து டெலிட் செய்யப்பட்டுள்ளன.

கிடுக்கிப்பிடி விசாரணை

கிடுக்கிப்பிடி விசாரணை

சுஷாந்தின் டெலிட் செய்யப்பட்ட டிவிட்டுகள் குறித்த தகவல்கள் வெளிவரும் நிலையில் அவரது மரணத்திற்கு பின்னால் உள்ள காரணமும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கிடுக்கிப்பிடி விசாரணையில் இறங்கியுள்ளது போலீசார்.

Recommended Video

Sushant Singh இறப்பில் தொடரும் மர்மம்
4 டைரிகள் கைப்பற்றல்

4 டைரிகள் கைப்பற்றல்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை விசாரிக்கும் மும்பை காவல்துறையினர் மரணத்திற்கான காரணத்தையும், நோக்கத்தையும் உறுதிப்படுத்த ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். அண்மையில் சுஷாந்தின் 4 டைரிகள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X