»   »  ச்சீ, அந்த படத்தில் நடிக்க கூப்பிட்டிருந்தாலும் நடித்திருக்க மாட்டேன்: இளம் ஹீரோ கடுகடு

ச்சீ, அந்த படத்தில் நடிக்க கூப்பிட்டிருந்தாலும் நடித்திருக்க மாட்டேன்: இளம் ஹீரோ கடுகடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பேஃபிக்ரே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் என பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்றவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். கூல் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் டோணியாக நடித்து பெயரும், புகழும் பெற்றார் சுஷாந்த்.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேஃபிக்ரே

பேஃபிக்ரே

ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ரன்வீர் சிங், வாணி கபூர் நடிப்பில் வெளியான பேஃபிக்ரே படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் சுஷாந்த் சிங்கிடம் கேட்கப்பட்டது என்று செய்தகிள் வெளியாகின.

சுஷாந்த்

சுஷாந்த்

பேஃபிக்ரே படத்தில் நடிக்க யாரும் என்னை கேட்கவில்லை. அந்த படத்தில் நடிக்க கேட்டிருந்தாலும் நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். பேஃபிக்ரே படம் அவர்கள் கூறியது போன்று நவீன யுகத்தின் காதலை வெளிப்படுத்தவில்லை என்கிறார் சுஷாந்த்.

ப்யோம்கேஷ் பக்ஷி

ப்யோம்கேஷ் பக்ஷி

டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பக்ஷி போன்ற படத்தில் நடிக்க ஆதித்யா சோப்ரா கேட்டால் நிச்சயம் நடிப்பேன். இயக்குனர் திபாகர் பானர்ஜி படத்தை வித்தியாசமாக எடுத்திருந்தார் என சுஷாந்த் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்

பாலிவுட்

ஷுத் தேசி ரொமான்ஸ், ப்யோம்கேஷ் பக்ஷி என ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடித்த சுஷாந்த் ஆதியின் படத்தை பற்றி இப்படி கூறியிருப்பது பாலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.

English summary
Bollywood actor Sushant Singh Rajput said that, 'I was never offered Befikre. But had I been offered, I wouldn't have done it.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil