'அவர் இல்லை என்பதே பெரும் வலியை தருகிறது' தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் டீம் அறிக்கை!

By

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிருடன் இல்லை என்பது பெரும் வேதனையை அளிக்கிறது என்று அவரது குழு சார்பில் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Recommended Video

கண் கலங்கிய Reshma Sanjana | Sushant Singh is Very Positive Person

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புத் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கை போ சே என்ற இந்தி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் இவர். அடுத்து, சுத் தேஸி ரொமான்ஸ், ஆமீர்கானின் பிகே ஆகிய படங்களில் நடித்தார்.

எம்.எஸ்.தோனி

எம்.எஸ்.தோனி

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை கதையான எம்.எஸ்.தோனி: அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்தப் படத்தை அடுத்து ராப்தா, வெல்கம் நியூயார்க், சிச்சோர், கேதார்நாத், டிரைவ் ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் அவருக்கு பெயரை பெற்றுத் தந்தன.

தூக்குப் போட்டு

தூக்குப் போட்டு

இந்நிலையில் சுஷாந்தின் மானேஜர் திஷா சாலியன், அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தச் செய்தி பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் டீம் சார்பில் ஓர் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பெரும் வலி

பெரும் வலி

சுஷாந்த் சிங் ராஜ்புத், இனி நம்முடன் இல்லை என்பதை பகிர்ந்து கொள்வது பெரும் வலியை தருகிறது. ரசிகர்கள் அவரைத் தங்களது மனதில் வைத்து, இதுவரை செய்ததை போல, அவரது வாழ்வையும் நடிப்பையும் கொண்டாட கேட்டுக்கொள்கிறோம். இந்த துக்கமான தருணத்தில் மீடியா எங்கள் தனிமையை அனுசரிக்க உதவுமாறு கேட்கிறோம்' என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X