அழுது விடுங்கள் ஆண்களே.. இப்படியொரு டிவீட் போட்டவரா.. தற்கொலை செய்துக் கொண்டார்.. ரசிகர்கள் சோகம்

மும்பை: சோகத்தை அடக்கி வைத்துக் கொண்டு அழுவதற்கு ஆண்கள் வெட்கப் பட தேவையில்லை. அழுது உங்களின் மனக் கவலைகளை மறந்துவிடுங்கள் என்ற சுஷாந்த் சிங்கின் சமீபத்திய டிவீட் ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி வருகிறது.

Recommended Video

தாயின் Photo உடன் உருக்கமாக sushant போட்ட கடைசி பதிவு!

இப்படியொரு டிவீட் போட்டவரா மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். காலம் மிகவும் மோசமானது என்று பல பாலிவுட் ரசிகர்களும் சோகத்தில் புலம்பி வருகின்றனர்.

பல சாதனை கனவுகளுடன் இருந்த 34 வயதே ஆகும் இளம் பாலிவுட் ஹீரோவின் திடீர் தற்கொலை பலரையும் மன ரீதியான பிரச்சனைகளை கவனிக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்த செய்து வருகிறது.

சூசைட் நோட்

சூசைட் நோட்

பொதுவாக வாழ்க்கையை வெறுத்து மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொள்ளும் நிலை வந்தாலும், தான் ஏன் தற்கொலை செய்துக் கொண்டேன் என்கிற ரகசியத்தை உலகிற்கு கடைசியாக ஒரு முறை உரக்க சொல்லிவிட வேண்டும் என்று பலரும் சூசைட் நோட் எழுதுவது வழக்கம். ஆனால், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டில் அதுபோன்ற கடிதம் எதையும் போலீசார் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

இந்த லாக்டவுனில் தனது வீட்டில் தனியாகவே பொழுதை கழித்து வந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மிகுந்த மன அழுத்தத்துடன் சில நாட்களாகவே காணப்பட்டார் என அவரது நண்பர்கள் தகவல் கொடுத்துள்ளனர். கடந்த வாரம் அவரது முன்னாள் பெண் மேனேஜர் திஷா சலியான் தற்கொலை செய்துக் கொண்டபோதும், ஏன் இப்படி செய்துக் கொண்டார் என்று மனம் நொந்து போய் சுஷாந்த் சிங் பதிவிட்டு இருந்தார்.

அழுது விடுங்கள் ஆண்களே

அழுது விடுங்கள் ஆண்களே

ஆண் பிள்ளை அழக் கூடாது என்று பலரும் அறிவுரை சொல்லியே வளர்ப்பார்கள், ஆனால், அவர்களுக்கும் உணர்சிகள் உண்டு, சோகத்தை மனதுக்குள்ளே அடக்கிக் கொண்டு வெடித்து விடாமல் இருக்க அழுது விடுங்கள் ஆண்களே என கடந்த நவம்பர் மாதம் ஜில்லட் விளம்பரத்தை ஷேர் செய்து சுஷாந்த் சிங் ராஜ்புத் பதிவிட்ட டிவீட்டை பார்த்த ரசிகர்கள், இவர் எப்படி தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார் என்ற ஆச்சர்யத்தில் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

டிரெண்டான மன அழுத்தம்

டிரெண்டான மன அழுத்தம்

சுஷாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தம் காரணமாகத்தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்ற தகவல் பரவிய நிலையில், #depression என்ற ஹாஷ்டேக்கும் கூடவே டிரெண்டாகி வருகிறது. நடிகை ராஷி கன்னா, ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலங்களும் மன அழுத்தம் குறித்த பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ரூமி கவிதை

ரூமி கவிதை

"நிழல் போலவே நானும்.. இருந்தாலும்.. இறந்தாலும்.. ஒன்று தான்" எனும் அர்த்தத்தில் "Like the shadow.. I am.. and.. I am not... ~ Jalaluddin Rumi Red heart" என்ற சுஷாந்த் சிங் ராஜ்புத் சிரித்தபடி போட்ட டிவீட்டும் தற்போது ரசிகர்களை சோகக் கடலில் மூழ்கடிக்கச் செய்து வருகிறது. மீண்டும் ஒரு உன்னத கலைஞனை இந்திய சினிமா இழந்திருப்பது உண்மைதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X