4 வருஷமாச்சு.. சுஷாந்த் சிங் மரணத்தில் விலகாத மர்மம்.. நீதி கேட்டு போராடும் சகோதரி!
மும்பை: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது சகோதரி ஆன்லைன் மூலம் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். இதற்காக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், #Nyay4SSRJanAndolan என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளார். இந்த விஷயம் சுஷாந்த் சிங் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புட் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் சின்னச்சின்ன அசைவுகளை கூட அப்படியே திரையில் காண்பித்து ரீல் தோனி என ரசிகர்களிடையே பெயர் எடுத்துவிட்டார் சுஷாந்த் சிங். வட மாநிலத்தின் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் நடித்துக்கொண்டிருந்த இவரின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் தான் எம்எஸ் தோனி.

மர்ம மரணம்: அந்த படத்திற்கு பின் பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிய இவருக்கு தொடர்ந்து நல்ல நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருந்த போது, 2020 ஆம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சுஷாந்த் சிங். இவருடைய மர்மமான மரணம் ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாலிவுட்டில் இருக்கும் நெப்போடிசம், அதனால் கைவிட்டு போன படங்கள், சுஷாந்துக்கு ஏற்பட்ட மன உளைச்சல் என பல குற்றச்சாட்டுகள் பாலிவுட் திரையுலகின் மீது வைக்கப்பட்டன.
தற்கொலை அல்ல கொலை: மேலும், சுஷாந்த் சிங் மரணம், தற்கொலை அல்ல கொலை என்று சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. எனினும் அவரது உடற்கூராய்வு முடிவுகளின்படி சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீதி வேண்டும்: இந்நிலையில், மறைந்த சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கிர்த்தி, தனது சகோதரரின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில், #Nyay4SSRJanAndolan என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளார். இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஸ்வேதா ஒவ்வொருவரும் தங்கள் மணிக்கட்டில் அல்லது நெற்றியில் சிவப்பு துணியைக் கட்டி, மறைந்த தனது சகோதரருக்கு நீதி கிடைக்க அனைவரையும் வீடியோ வெளியிடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நான்கு வருஷம் ஆச்சு: இதற்கான விசாரணையை சிபிஐ துரிதப்படுத்தி விரைவில் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தனது சமூகவலைதளப் பதிவில், இன்னும் 45 நாட்களில் என் அண்ணன் சுஷாந்த் மறைந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. சிபிஐ விரைவில் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். இந்த விஷயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்.


Click it and Unblock the Notifications











