ரியாவுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி அழுத்தம்.. சுஷாந்த் சிங் நண்பர் பகீர் புகார்!
மும்பை: நடிகை ரியா சக்கரவர்த்திக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்குமாறு சுஷாந்த் குடும்பத்தினர் அழுத்தம் கொடுப்பதாக, அவர் நண்பர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மருந்து, மாத்திரை
கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் சுஷாந்த் சிங். இவர் நடித்த கடைசி படமான, தில் பெச்சாரா கடந்த மாதம் 24 ஆம் தேதி ஒடிடி-யில் வெளியானது. நடிகர் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

ரியா சக்கரவர்த்தி
சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார்.

சுஷாந்த் சிங் தந்தை
இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னா ராஜீவ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ரியா சக்கரவர்த்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர், சுஷாந்தை நடிகை ரியா மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, ரியாதான் கையாண்டு வந்ததாகவும் அவர் கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, 15 கோடி ரூபாய் வரை, ரியாவுக்குப் பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சித்தார்த் பிதானி
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பரான சித்தார்த் பிதானி, பரபரப்பு புகார் ஒன்றை இப்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மும்பை, பாந்த்ரா போலீஸூக்கு மெயில் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஜூலை 22- ஆம் தேதி சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் மற்றும் தெரியாத எண்ணில் இருந்து என்னை சிலர் அழைத்தார்கள். கான்பரன்ஸில் பேசினார்கள்.

ரியாவுக்கு எதிராக
ரியா சக்கரவர்த்தி, பாந்த்ராவில் சுஷாந்த் சிங்குடன் ஒன்றாக வசித்த போது செய்த செலவுகள் பற்றி கேட்டனர். பிறகு கடந்த 27 ஆம் தேதி மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. சுஷாந்தின் சகோதரி மிது சிங், உயர் போலீஸ் அதிகாரி ஓ.பி.சிங் ஆகியோர் பேசினர். அவர்கள், ரியாவுக்கு எதிராக பீகார் போலீசிடம் வாக்குமூலம் அளிக்கும்படி அழுத்தம் கொடுத்தனர். மீண்டும் ஒரு முறை அழைப்பதாகக் கூறினர். அதன்படி ஒரு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது.

பேச முடியவில்லை
ஆனால் அது 40 செகண்டில் முடிந்துவிட்டது. அதில் எதையும் பேச முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நடிகை ரியாவுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும்படி சுஷாந்த்தின் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்ததாக அவரது நண்பர் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பாட்னா போலீசார், இவரிடமும் சுஷாந்திடம் பணியாற்றிய தேவேஸ் சாவந்த் ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.


Click it and Unblock the Notifications











